வருகை தந்தமைக்கு நன்றி..

புதன், 25 மார்ச், 2020

ஊரடங்கு வாழ்க்கை ஒரு பார்வை...

Download As PDF

வியாழன், 16 ஜனவரி, 2014

அ.தி.மு.க ஒன்றிய செயலாளர் கைது

சூதாடிய வழக்கில் அ.தி.மு.க ஒன்றிய செயலாளருடன் தி.மு.க ஒன்றிய செயலாளர்கள் கைது

.
    
 ரூர் மாவட்டத்தில் பணம் வைத்து சூதாடியதாக அ.தி.மு.க ஒன்றிய செயலாளருடன் தி.மு.க ஒன்றிய செயலாளர்கள்

  • உள்ளிட்ட 22 பேரை போலிஸார் அதிரடியாக கைது செய்தனர்.
  • கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் நண்பர்கள் மனமகிழ் மன்றம் என்ற 
  •  
  • பெயரில்  லட்சக்கணக்கில் பணம் வைத்து சூதாட்டம் நடந்துவருவதாகவும், 
  • இதில் ஆளுங்கட்சி மற்றும் தி.மு.க வைச்சேர்ந்த அரசியல் புள்ளிகள் 
  • ஈடுபடுவதாகவும் இது தெரிந்தும் உள்ளூர் போலிஸார் எந்த நடவடிக்கையும் 
  • எடுக்காமல் உள்ளனர் என மாவட்ட கண்காணிப்பாளருக்கு தொடர் புகார் சென்றது.

    இதன் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜோசி நிர்மல் 
  •  
  • குமார், ஏ.எஸ்.பி இளங்கோ உள்ளிட்ட போலிஸார் நேற்று சம்பந்தப்பட்ட மனமகிழ் மன்றத்தை திடீர் முற்றுகையிட்டனர்.
  •  
  • அப்போது அங்கு சூதாடிக்கொண்டிருந்த ஈரோடு மாவட்டம் கொடுமுடியை ஒன்றியத்தைசேர்ந்த அ.தி.மு.க ஒன்றிய செயலாளர் கே.பி. சந்திரசேகரன், மற்றும் அரவக்குறிச்சி ஒன்றிய  தி.மு.க செயலாளர் மணியன், தாந்தோணி தி.மு.க ஒன்றிய செயலாளர் ரகுநாதன் உட்பட 22 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து ரூ 6 லட்சத்து 80 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.
  •  
  • கைது செய்யப்பட்ட 22 பேரும் கரூர் டவுன் போலிஸ் ஸ்டேசனுக்கு கொண்டுவரப்பட்டு வழக்கமான நடைமுறைகளுக்கு பின்னர் வழக்கு பதியப்பட்டது.
  •  
  •  
  • பொங்கல் நாளில் தி.மு.க அரசியல் புள்ளிகளுடன் அ.தி.மு.க அரசியல்வாதியும் சேர்த்து கைது செய்யப்பட்டது ஆளுங்கட்சியை சேர்ந்தவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

  • குறிப்பு: கரூர் நகர காவல் நிலையத்துக்கு அரவக்குறிச்சியில் கைது செய்யப்பட்டவர்களை போலிஸார் தனிவாகனம் வைத்து கொண்டுவந்தனர்.
  •  
  • அப்போது ஒவ்வொருவராக வாகனத்தில் இருந்து இறங்கி ஸ்டேசனுக்குள் சென்றனர். எந்தவித பதட்டமும் இல்லாமல் பலர் ஸ்டேசனுக்குள் சென்றபோது கொடுமுடி ஒன்றிய அ.தி.மு.க செயலாளர் சந்திரசேகரன் தனது தலையை குனிந்தபடி ஒரு கையில் வேஷ்டியை தூக்கி பிடித்துக்கொண்டு வேகமாக சில நொடிகளுக்குள் மின்னலாக ஸ்டேசனுக்குள் ஓடி மறைந்தார். கேமராக்களின் கண்களுக்குள் பட்டுவிடக்கூடாது என்ற எண்ணத்தில் அவர் ஓடியபோதும்  கெட்டிக்கார வீடியோ கிராபர் ஒருவர் அதனை படம் பிடித்துவிட்டார்.
Download As PDF

புதன், 2 அக்டோபர், 2013

ஈரோடு மாவட்டத்தில் 16 லட்சத்து 57 ஆயிரத்து 398 வாக்காளர்கள். ஆட்சித்தலைவர் அறிவிப்பு

ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளிலும் 16 லட்சத்து 57 ஆயிரத்து 398 வாக்காளர்கள் உள்ளதாக
Download As PDF

வியாழன், 9 மே, 2013

விடுதலைப்புலிகளால் சுட்டுவீழ்த்தப்பட்ட விமானத்தால் பரபரப்பு

                   


லங்கை அரசுக்கும்  தமிழீழ விடுதலைபுலிகளுக்கும் போர் நடந்த காலத்தில் 

லயன் ஏர் என்ற விமானம் புலிகளினால் சுட்டுவீழ்த்தப்பட்டது. 


சுட்டுவீழ்த்தப்பட்ட விமானம் குறித்த செய்தியை தற்போது இலங்கை அரசினால்

கைது செய்யப்பட்டிருக்கும் புலிகளில் ஒருவர் விசாரணையின்போது

தெரிவித்திருக்கிறார்.

இந்த தகவலின் பேரில் இலங்கை அரசு புலிகளின் தாக்குதலுக்குள்ளாகி

கடலுக்குள் கிடந்த விமானத்தை மீட்கும் பணியில் ஈடுபட்டது.

 அப்போது விமானத்தின் முக்கிய உறுப்புகளில் ஒன்றாக கருதப்படும்

விமானிகளின் நடவடிக்கைகள் குறித்து பதிவு செய்யும் கருவியான கருப்பு

பெட்டி புலிகளின் கடற்படை பிரிவினால் அகற்றப்பட்டுள்ளது தெரிய

வந்துள்ளது Download As PDF

சேஷாத்திரி ஸ்வாமிகள்

                                                          



கொடுமுடி அருகே உள்ள ஊஞ்சலூரில் உள்ளது ஸ்ரீ சேஷாத்திரி ஸ்வாமிகள்

அதிட்ஷ்டானாம்.

 திருவண்ணாமலையில் வாழ்ந்து மறைந்த மகான் சேஷாத்திரி ஸ்வாமிக்காக

அமைக்கப்பட்ட இந்த அதிட்ஷ்டானத்தில் தினந்தோறும்  வழிபாடுகள்

நடத்தப்பட்டு வருகிறது. புகைப்படத்தில் காணப்படுவது  அதிட்ஷ்டானத்தில்

உள்ள ஸ்வாமிகளின் திருவுருவ காட்சி.
Download As PDF

ஞாயிறு, 14 ஏப்ரல், 2013

ஒரு எலுமிச்சம் பழம் ரூ10 ஆயிரம்.

                                                  

ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே உள்ளது கந்தசாமிபாளையம்.

 இந்த ஊரில் புகழ் பெற்ற சடையப்பசுவாமிகோயில் உள்ளது.

இந்தக்கோயிலில் வருடந்தோறும் தமிழ் வருடத்தின் முதல் மாதமாக

கருதப்படும் சித்திரைத்திருநாளின் முதல் நாளில் பொதுமக்களுக்கு

அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

கடந்த 32 ஆண்டாக தொடரும் இந்த நிகழ்ச்சி  இன்று 33 ம் ஆண்டாக நடந்தது.  

ஆயிரக்கணக்கான பக்தர்கள் அன்னதான விழாவில் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியின் இறுதியில்  சடையப்பசுவாமியின் பூஜையில் வைக்கப்பட்ட

எலுமிச்சை,

உப்பு, மசாலத்தூள் பாக்கெட்டுகள் ஏலத்தில் விடப்பட்டன. இதில் முதல்

எலுமிச்சம் பழம் ரூ 10 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போனது.  இந்தப்பழத்தை

உடுமலையைச்சேர்ந்த ஜோதிபிரகாஷ் என்பவர் ஏலத்தில் எடுத்துள்ளார்.
Download As PDF

திங்கள், 3 செப்டம்பர், 2012

மனிதனைக்கெடுப்பவையாக உள்ளன.

                   
சிவகிரி அருகே தாண்டாம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில்
Download As PDF