வருகை தந்தமைக்கு நன்றி..

வியாழன், 12 ஜனவரி, 2012

தமிழர்திருநாள்

தைத்திருநாள் தமிழர் திருநாளாக காலங்காலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
உணவைத்தரும் தொழிலான வேளாண்மைக்கு உற்ற துணைவனாக இருக்கும்  கதிரோனுக்கும்
உழவுத்தொழிலுக்கு உறுதுணையாக இருக்கும் காளைகளுக்கும் நன்றி சொல்லும் விதமாக இந்த திருநாள்
தமிழர்களால் கடைபிடிக்கப்பட்டுவருகிறது.

உழவுத்தொழிலில் காளைகளின் ஆதிக்கம் முடிந்து டிராக்டர்கள்
வந்துவிட்டபோதிலும்  பல இடங்களில்
உழவுத்தொழிலுக்கு உறுதுணையாக உள்ள இயந்திரங்களையும் இந்த வழிபாட்டில்
வைத்து சிறப்பு செய்யப்பட்டுவருகிறது.

அந்த வகையில் விழாவுக்கு முக்கியமானதாக கருதப்படும் பொங்கலை
மண்பாத்திரங்களைக்கொண்டு செய்வது சிறப்பு. எவ்வளவுதான் நாகரிகம் வளர்ந்திருந்தபோதிலும்,
உலோகத்தாலான பாத்திரங்களை தவிர்த்து உலோகத்துக்கு பதில் மண்பாத்திரங்களையும், மண் அடுப்புகளையும்
வாங்கி  மண்பாத்திரத்தில் பச்சரியை போட்டு புதுத்தண்ணீர் ஊற்றி, பாத்திரத்தை சுற்றிலும் புது மஞ்சளை தோகையுடன்
சுற்றி அடுப்பை சுற்றி கரும்புகளை அம்பாறியாக வைத்து  பொங்கல் வைத்து வழிபடுவது வழக்கம்.


இந்த பொங்கலில் இயற்கை மணம் கமழும்… அந்த வகையில் மண் அடுப்பும், மண்பாத்திரமும்
மற்ற நாட்களை விட தை முதல் நாளில் முக்கியமாக தேவைப்படும் பொருட்கள்.

இன்றைய நாளில் மண்பாண்டத்தொழில் நசுங்கி விட்ட போதிலும்.. தை முதல் நாள் மண்பாண்டங்கள்
 விற்கும் கடைகளுக்கு முக்கியத்துவம் பெருகிறது.

அந்த வகையில் இந்த ஆண்டு தைத்திருநாளுக்கு விதவிதமான வகைகளில்
மண்பாண்டங்களை தயாரித்து விற்பனைக்கு கொண்டு வந்துள்ளனர்

கொடுமுடி அருகே சாலைப்புதூரில் உள்ள வெங்கடேஸ்வரா
மளிகை கடை நிர்வாகத்தினர்.

இந்த கடையில் விற்கும் படும் மண்பாத்திரங்கள் இருவிதமான மண் ரகங்களைக்கொண்டு
 நாம் அன்றாடம் உபயோகித்துவரும் உலோகத்தாலான பாத்திரங்கள் வடிவில் மண்ணால்
 உருவாக்கப்பட்டுள்ளது  சிறப்பானதாக உள்ளது.
Download As PDF

கருத்துகள் இல்லை: