வருகை தந்தமைக்கு நன்றி..

புதன், 2 அக்டோபர், 2013

ஈரோடு மாவட்டத்தில் 16 லட்சத்து 57 ஆயிரத்து 398 வாக்காளர்கள். ஆட்சித்தலைவர் அறிவிப்பு

ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளிலும் 16 லட்சத்து 57 ஆயிரத்து 398 வாக்காளர்கள் உள்ளதாக
Download As PDF

வியாழன், 9 மே, 2013

விடுதலைப்புலிகளால் சுட்டுவீழ்த்தப்பட்ட விமானத்தால் பரபரப்பு

                   


லங்கை அரசுக்கும்  தமிழீழ விடுதலைபுலிகளுக்கும் போர் நடந்த காலத்தில் 

லயன் ஏர் என்ற விமானம் புலிகளினால் சுட்டுவீழ்த்தப்பட்டது. 


சுட்டுவீழ்த்தப்பட்ட விமானம் குறித்த செய்தியை தற்போது இலங்கை அரசினால்

கைது செய்யப்பட்டிருக்கும் புலிகளில் ஒருவர் விசாரணையின்போது

தெரிவித்திருக்கிறார்.

இந்த தகவலின் பேரில் இலங்கை அரசு புலிகளின் தாக்குதலுக்குள்ளாகி

கடலுக்குள் கிடந்த விமானத்தை மீட்கும் பணியில் ஈடுபட்டது.

 அப்போது விமானத்தின் முக்கிய உறுப்புகளில் ஒன்றாக கருதப்படும்

விமானிகளின் நடவடிக்கைகள் குறித்து பதிவு செய்யும் கருவியான கருப்பு

பெட்டி புலிகளின் கடற்படை பிரிவினால் அகற்றப்பட்டுள்ளது தெரிய

வந்துள்ளது Download As PDF

சேஷாத்திரி ஸ்வாமிகள்

                                                          



கொடுமுடி அருகே உள்ள ஊஞ்சலூரில் உள்ளது ஸ்ரீ சேஷாத்திரி ஸ்வாமிகள்

அதிட்ஷ்டானாம்.

 திருவண்ணாமலையில் வாழ்ந்து மறைந்த மகான் சேஷாத்திரி ஸ்வாமிக்காக

அமைக்கப்பட்ட இந்த அதிட்ஷ்டானத்தில் தினந்தோறும்  வழிபாடுகள்

நடத்தப்பட்டு வருகிறது. புகைப்படத்தில் காணப்படுவது  அதிட்ஷ்டானத்தில்

உள்ள ஸ்வாமிகளின் திருவுருவ காட்சி.
Download As PDF

ஞாயிறு, 14 ஏப்ரல், 2013

ஒரு எலுமிச்சம் பழம் ரூ10 ஆயிரம்.

                                                  

ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே உள்ளது கந்தசாமிபாளையம்.

 இந்த ஊரில் புகழ் பெற்ற சடையப்பசுவாமிகோயில் உள்ளது.

இந்தக்கோயிலில் வருடந்தோறும் தமிழ் வருடத்தின் முதல் மாதமாக

கருதப்படும் சித்திரைத்திருநாளின் முதல் நாளில் பொதுமக்களுக்கு

அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

கடந்த 32 ஆண்டாக தொடரும் இந்த நிகழ்ச்சி  இன்று 33 ம் ஆண்டாக நடந்தது.  

ஆயிரக்கணக்கான பக்தர்கள் அன்னதான விழாவில் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியின் இறுதியில்  சடையப்பசுவாமியின் பூஜையில் வைக்கப்பட்ட

எலுமிச்சை,

உப்பு, மசாலத்தூள் பாக்கெட்டுகள் ஏலத்தில் விடப்பட்டன. இதில் முதல்

எலுமிச்சம் பழம் ரூ 10 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போனது.  இந்தப்பழத்தை

உடுமலையைச்சேர்ந்த ஜோதிபிரகாஷ் என்பவர் ஏலத்தில் எடுத்துள்ளார்.
Download As PDF