வருகை தந்தமைக்கு நன்றி..

திங்கள், 22 ஆகஸ்ட், 2011

சிந்தனையை வளர்க்க சித்திரங்கள்...

                                                             


                                       சிந்தனையை வளர்க்க சித்திரங்கள் உதவும்.

                                 ஈரோடு மாவட்டம் அரச்சலூரில் உள்ள அரசு 

மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் வகுப்பறை கட்டிடங்களில்

 மாணவர்கள் எளிதில் தெரிந்து கொள்ளும்படி தேச தலைவர்கள், 

சுதந்திரபோராட்ட தியாகிகள் மற்றும்

முன்னாள் ஜனாதிபதிகள், தமிழக முதல்வர்கள் ஆகிய உருவப்படங்கள் 

பெயிண்டால் வரையப்பட்டுள்ளது.

 தவிர மாணவர்கள் அமர்ந்து படிக்கும் இடங்களில் உலக வரைபடம், சூரிய 

குடும்பம் குறித்த படங்கள் வரையப்பட்டு அதன் விளக்கங்கள் 

எழுதப்பட்டுள்ளது.

                             இந்த பள்ளி ஈரோட்டிலிருந்து பழனிசெல்லும் மாநில 

நெடுஞ்சாலையில் அமைந்துள்ளதால்  அதன் சுற்றுச்சுவற்றில் திருக்குறள், 

பழமொழிகள், ஆங்கில பொன்மொழிகள், தலைவர்களின் அறிவுரைகள், 

அறிஞர்களின் தத்துவங்கள்,     பள்ளியை பற்றிய குறிப்புகள்  என பல்வேறு 

தகவல்களை படங்கள் மற்றும் எழுத்தால் வரையப்பட்டுள்ளது.

 இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் விஐயகுமார்   கூறியதாவது : அரசு 

மாணவர்களின் அறிவு மற்றும்  ஞாபகசக்தியை மேம்பாடு செய்ய பல்வேறு 

யுக்திகள் கையாளப்படுகிறது. இந்த வகையில் மாணவர்களின்  சிந்தனை 

சக்தியை தூண்டுவதற்காக, பல்வேறு தகவல்களை படங்கள், எழுத்துகளாக 

கொடுத்துள்ளோம். இந்த முயற்சி மாணவர்களை  மட்டுமல்ல  அனைத்து

தரப்பினரையும் கவர்ந்துள்ளது என்றார்.



Download As PDF

கருத்துகள் இல்லை: