வருகை தந்தமைக்கு நன்றி..

புதன், 24 ஆகஸ்ட், 2011

சீரமைக்கப்பட்ட பேருந்து நிலையம் திறப்பது எப்போது?!

                                                     

         ஈரோடு மாவட்டம் கொடுமுடியில்  37 லட்சம் செலவில் சீரமைக்கப்பட்ட பேருந்து நிலையம் திறக்கப்படாமல் உள்ளதால் பயணிகள் மிகுந்த          அவதிக்குள்ளாகி வருவதுடன் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.

  கொடுமுடியில் உள்ள பேருந்து நிலையம் ரூ37 லட்சம் செலவில் புதுப்பிக்கும் பணி

 கடந்த  ஆறு மாதங்களுக்கு முன்னர் துவங்கியது.
   
                  இந்தப்பணி முடிவடைந்த நிலையில்  பேருந்து நிலையம் இன்னும் திறக்கப்படாமல் உள்ளது.

 இதனால் கொடுமுடி வழியே வெளி ஊர்களுக்கு செல்லும் அனைத்துப்பேருந்துகளும் ஈரோடு கரூர் நெடுஞ்சாலையில் நிறுத்தி வைக்கபடுகின்றன.

 இதனால் போக்குவரத்துக்கு   மிகுந்த நெரிசல் ஏற்படுகிறது.

              தவிர  வெளி ஊர்களுக்கு பேருந்து பயணத்தை மேற்கொள்ளவரும் பயணிகளும், கொடுமுடி நகர வாசிகளும், பள்ளி மாணவ மாணவிகளும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.
   
 நெரிசல் மிகுந்த இந்த இடத்துக்கு அருகே டாஸ்மாக் கடையும், அதன் எதிரே காவல் நிலையமும் உள்ளது.

  டாஸ்மாக் கடைக்கு வரும் குடிமகன்களில் சிலர் போதை தலைக்கேறிய நிலையில் தள்ளாடி தள்ளாடி வாகனங்களில்

 வருவதால் விபத்துக்கள் அபாயமும் தொடர்கிறது.

   காவல் நிலையம் முன்பே போக்குவரத்து நெரிசல் இருந்தும்  காவலர்கள் அதனை கண்டுகொள்வதாக தெரியவில்லை.

  மாவட்ட நிர்வாகம் தலையிட்டு இதற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்

    என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
Download As PDF

கருத்துகள் இல்லை: