வருகை தந்தமைக்கு நன்றி..

சனி, 20 ஆகஸ்ட், 2011

ஸ்ரீ ஜெயந்தி விழா

                                            

                                                                

                                                                    ஸ்ரீ ஜெயந்தி விழா

            கொடுமுடி கிருஷ்ணா நகரில் உள்ளது  ஸ்ரீ கிருஷ்ணர்

கோயில். இங்கு  இன்று ஆகஸ்ட் 21    (ஞாயிற்றுக்கிழமை) கிருஷ்ணஜெயந்தி விழா மற்றும்

108சங்காபிஷேக விழா நடைபெறுகின்றது.
             
             மாலை 3 மணிக்கு விநாயகர் வழிபாடு, சங்கு பூஜை, ஹோமபூஜை,   

பூர்ணாகுதி, 4மணிக்கு சங்காபிஷேகம்,  5 மணிக்கு

மகாதீபாராதனை, 6 மணிக்கு  பிரசாதம் வழங்குதல் நடைபெறுகிறது.

Download As PDF

விவசாயிகள் கவலை

                                   லாரிகள் வேலை நிறுத்தம் விவசாயிகள் கவலை.

              
    ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட லாரிகள் தொடர்
 
   வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டதால் மஞ்சள் விவசாயிகள்

   கவலை அடைந்துள்ளனர்.

              ஈரோடு மாவட்டம் மஞ்சள் உற்பத்திக்கு பெயர் பெற்ற மாவட்டம். இந்த

   மாவட்டத்தில் முக்கிய விளைபொருளாக மஞ்சளை விவசாயிகள் பயிர்

   செய்துவருகின்றனர்.

             மருந்துபொருட்கள்,மற்றும் உணவுப்பொருட்கள்,அழகு

   சாதனப்பொருட்கள், ஆகியவற்றில் மஞ்சள் முக்கிய மூலப்பொருளாக

   உபயோகப்படுகிறது.

             ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஆண்டு மஞ்சளுக்கு கிடைத்த விலையை

   பார்த்து அதிகப்படியான பரப்பளவில் விவசாயிகள் அதனை

   பயிரிட்டுள்ளனர்.

               சட்டை எனப்படும் மூட்டை ஒன்று ரூ 15 ஆயிரத்துக்கும் மேலாக

   விலைபோன மஞ்சள் எதிர்பாராத விதமாக தற்போது ரூ5 ஆயிரத்துக்கு

   சரிந்துள்ளது.
  
               இந்த நிலையில் சுங்கவரி உயர்வு, டீசல் விலை ,உள்ளிட்ட பல்வேறு

    காரணங்களை முன்னிறுத்தி கடந்த ஆகஸ்ட் 18 ம் தேதி முதல்

தென்னிந்தியா   முழுவதும் லாரிகள் வேலை நிறுத்தத்தில்

ஈடுபட்டுவருகின்றன.

   இந்த வேலை நிறுத்தத்தில் ஈரோடு மாவட்ட லாரிகளும் பங்கேற்றுள்ளதால்

   ஈரோடு மஞ்சள் மார்க்கெட்டில்  மஞ்சள் கொள்முதல் சுணக்கம் அடைந்தது.

   வாங்கும் மஞ்சளை கொண்டு செல்ல வழியின்றி வியாபாரிகள் உள்ளதால்

   மஞ்சள் ஏலத்தை நிறுத்தி வைப்பது குறித்து ஆலோசிக்கப்படுகிறது.
          
                மஞ்சள் ஏலம் நிறுத்தப்பட்டு மீண்டும் துவக்கப்பட்டால் வரத்து
  
 அதிகரிப்பை முன்னிட்டு விலை குறையும் என்ற கவலையில் விவசாயிகள்

    உள்ளனர்.







                              
Download As PDF

வெள்ளி, 19 ஆகஸ்ட், 2011

பங்கு சந்தை வணிகத்தில் பரிதாப முடிவு

                               
                           
                                   
                                                                               
 
                                  பங்கு சந்தை வணிகத்தில் பரிதாப முடிவு

              ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியை அருகே உள்ள ஆலுத்துப்பாளையம்  கிராமத்தைச் சேர்ந்தவர் மதியழகன் (45). விவசாயி. இவர் பங்கு சந்தை வணிகத்தில் ஈடுபட்டு வந்தார். இவருக்கு கோமதி (37) என்ற மனைவியும், மைதிலி (20), மாலதி (18) என்ற இரு மகள்களும் உள்ளனர். மைதிலியும்,மாலதியும்,  தற்போது தனியார் இன்ஜீனியரிங்கல்லூரி ஒன்றில் படித்து வருகின்றனர்.  மதியழகனின் மாமனார்  வெங்கடாசலம்  விவசாயி அவருக்கு   நல்லாந்தொழுவு  என்ற கிராமத்தில்  விவசாய நிலம் உள்ளது. பங்கு சந்தை வணிகத்தில் ஈடுபட்டு வந்த மதியழகன் அதில்  அதிக முதலீடு செய்துவந்துள்ளார்.
                  
           அமெரிக்க பொருளாதர சரிவு, மற்றும் கச்சா எண்ணெய் விலையில் காணப்படும் நிலையற்ற தன்மை, இந்திய அரசியலில் நிகழும் குழப்பங்கள் உள்ளிட்ட உள்நாடு மற்றும் வெளிநாட்டு ஸ்திரதன்மையற்ற போக்கால் இந்திய பங்கு சந்தை வணிகத்தில் மதியழகன் முதலீடு செய்திருந்த பங்குகளில் வீழ்ச்சி ஏற்பட்டது. இதனால்  மனம் உடைந்த மதியழகன்  நேற்று  தனது மாமனார் தோட்டம் அமைந்துள்ள நல்லாந்தொழுவுக்கு சென்று  தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து அரச்சலூர் போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Download As PDF

உற்பத்தியாளர்கள் பாதிப்பு

                                                     



                                                    உற்பத்தியாளர்கள் பாதிப்பு

                        அவல்பூந்துறை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் கலாசி தொழிலாளர்கள், வியாபாரிகளிடையே ஏற்பட்ட பிரச்சனையால் கொப்பரை ஏலம்   நடைபெறவில்லை.

                       ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறையில் தமிழக அரசின் ஒழுங்கு முறை விற்பனைக்கூடம் உள்ளது. இந்த கூடத்தில் மொடக்குறிச்சி மற்றும் அதன்               சுற்றுப்புற பகுதிகளைச்சேர்ந்த விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த கொப்பரை தேங்காய் பருப்புகளை விற்பனைக்கு கொண்டு வருவது வழக்கம்.

                       வாரந்தோறும்  திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில், விற்பனைக்கூடத்தில் கொப்பரை தேங்காய் ஏலம் நடைபெறுவது வழக்கம்
      
                       ஏல நாளன்று விற்பனைக்கு வரும் பொருட்களை கையாளும்  தொழிலாளர்கள் தங்களுக்கு கூலி உயர்வு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்து வந்தனர். இவர்களின் கோரிக்கை குறித்து கடந்த ஞாயிற்றுக்கிழமை ஈரோடு அடுத்த திண்டலில் உள்ள மாவட்ட விற்பனைக்குழு தலைமை அலுவலகத்தில் கூலி உயர்வு குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தையில்மாவட்ட விற்பனை குழு செயலாளர் ஞானவேல் தலைமையில் அவல்பூந்துறை வேளாண் விற்பனை கூட கண்காணிப்பாளர் தண்டபாணி, மாவட்ட அண்ணா தொழிற்சங்கத்தைச்சேர்ந்த  தெய்வநாயகம்,  மொடக்குறிச்சி ஒன்றியக்குழுவின் முன்னாள் தலைவர் செந்தில், தேங்காய் பருப்பு வியாபாரிகள் சங்க தலைவர் சாமிமுத்து, செயலாளர் கணேசன், தேங்காய் வியாபாரிகள் சங்க தலைவர் மில்மணி ஆகியோர் கலந்துகொண்டனர்.

                     பேச்சுவார்த்தையின்போது  தற்போது  வழங்கப்பட்டு வரும் குவிண்டாலுக்கான கூலி ரூ. 10.50 ஐ  ரூ. 45 ஆக தர வேண்டும் என கலாசி தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்தனர். குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 12.50 ஐ தருவதாக வியாபாரிகள் வழங்குதாக தெரிவித்தனர்.  இதனை கலாசி தொழிலாளர்கள்  ஏற்க மறுத்ததால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.

                      கடந்த ஆகஸ்ட் 15 ம்தேதி திங்கள் கிழமை சுதந்திர தினத்தை முன்னிட்டு விற்பனை கூடத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.  இதனை அடுத்து  நேற்று வெள்ளிக்கிழமை  19 ம்தேதி வழக்கமாக நடைபெறும் கொப்பரை ஏலம்  கூலி பிரச்சனை முடிவுக்கு வராததால் தள்ளி வைக்கப்பட்டது.  இதனால்ரூ 2 கோடி மதிப்பிலான கொப்பரை  தேங்காய் பருப்புகள் ஏலம் போகாமல் தேங்கியது. விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். இந்த பிரச்சனையை  ஈரோடு மாவட்ட நிர்வாகம் முடிவுக்கு கொண்டுவரவேண்டும்  என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் உள்ளனர்.

Download As PDF

அதிர்ச்சி தரும் குறுந்தகவல்….

                        

                                                              அன்னாஹசாரே…
                                                    அதிர்ச்சி தரும் குறுந்தகவல்…
                                                                                                                                 
                                                                      

              லோக்பால் மசோதாவை நிறைவேற்றக்கோரி அன்னாஹசாரே  நடத்திவரும் அறப்போராட்டத்துக்கு இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்களில் மக்கள்     பலத்த ஆதரவு குரல் எழுப்பி வருகின்றனர்.

             உண்ணாவிரதத்தின் இரண்டாம் நாளான நேற்று ஆகஸ்ட்19ம் நாளில் அன்னாஹசாரே விளக்கியதாக சொல்லி கைபேசிகளில் குறுந்தகவல் ஒன்று      வேகமாக பரவிவருகிறது.
  
            அதனை அனுப்புவர்கள் ,  இந்த தகவலை குறைந்தது பத்து இந்தியர்களுக்காவது  தெரியப்படுத்துங்கள் என்ற வேண்டுகோளுடன் தகவலை     அனுப்புகின்றனர்.
   
            குறுந்தகவலில் உள்ள சரத்து ஆச்சர்யத்தையும் ,மலைப்பையும் ஏற்படுத்துவதாக உள்ளது.
   
            ரூ1,456 லட்சம் கோடிகள் இந்தியப்பணம் கருப்பு பணமாக பல்வேறு வகையில் ஊழல் தொகையாக முடக்கப்பட்டிருக்கிறது.
  
            இந்த தொகை திரும்ப வந்தால் இந்தியா பொருளாதாரத்தில் உலகில் முதல் இடத்தை பிடிக்கும். தவிர இந்த தொகையினை பிரித்துக்கொடுத்தால்     இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்துக்கும்ரூ60 ஆயிரம் கோடிகளை தர முடியும்.
    
            இந்திய கிராமங்கள் அனைத்துக்கும் பிரித்துக்கொடுத்தோம் என்றால் ஒவ்வொரு கிராமத்துக்கும் ரூ 100 கோடியை தரமுடியும்.
  
  1.             இருபது வருடங்களுக்கு இந்தியாவில் வரிகட்டவேண்டிய அவசியம் இருக்காது. பெட்ரோல் லிட்டர் ரூ 20க்கும், டீசல் ரூ 5க்கும், பால் ரூ8 க்கும் தர முடியும்    என்று அந்த குறுந்தகவலில் சொல்லப்பட்டிருக்கிறது.

Download As PDF

லோக்பால் பொதுக்கூட்டம்

                                              
                                    
                                                                  பொதுக்கூட்டம்

அன்னாஹசாரே முன் மொழிந்த லோக்பால் மசோதாவை   இந்திய அரசு

நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி  ஈரோடு மாவட்டம்

 கொடுமுடி புதிய பேருந்து நிலையம் முன்பு பொதுக்கூட்டம் நடக்கிறது.
   
       பொதுமக்கள் சார்பாக ஒழுங்கு செய்யப்பட்டுள்ள இந்த

பொதுக்கூட்டம் ஆகஸ்ட் 25 ம்தேதி மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது.
   
    கூட்டத்திற்கு கொடுமுடி மருத்துவர் நடராஜன் தலைமை வகிக்கிறார்.
Download As PDF

மஞ்சள் சாகுபடி கருத்தரங்கு

                                                  மஞ்சள் சாகுபடி கருத்தரங்கு

கொடுமுடி அருகே உள்ள  வருந்தியாபாளையத்தில் மஞ்சள் சாகுபடியில்  செலவை குறைத்து மகசூளை பெருக்கி லாபத்தை அடைய கையாள வேண்டிய தொழில் நுட்ப உத்திகள் குறித்த கருத்தரங்கம் நடக்கிறது.

 ஆகஸ்ட்21  ம்தேதி  10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் இந்த கருதரங்கில் விவசாயிகள் மற்றும் அதிகாரிகளின் நேர்முக கலந்துரையாடல் நடக்கிறது.கருத்தரங்கிற்கான ஒழுங்கினை  இந்திய தொழிற்கூட்டமைப்பினர் செய்துள்ளனர். 
Download As PDF

உயிரின் மொழி

 





 











  உயிரின் மொழி 
   இறைவனின் தோழி
   பிரம்மனின் எஜமான்
   உலகின் மூலம்
  அர்பணிப்பின்…அடையாளம்
   சகிப்பின்…இலக்கணம்
  தியாகத்தின்….ஊற்றுக்கால்
  மொழிகளின் மூலம்
  இவை ….
  அணைத்தின் புகழிடம்
  தாய்.


 
 
Download As PDF

ரேஷன் அரிசியை நிவேதானமாக பெற்ற நாகேஸ்வரர்.

                     ரேஷன் அரிசியை நிவேதானமாக பெற்ற நாகேஸ்வரர்.

   ஈரோடு மாவட்டம் கொடுமுடியை அடுத்த ஊஞ்சலூரில் அமைந்துள்ளது. நாகேஸ்வரர்கோயில்.

விஜயநகர பேரரசர்கள் காலத்தில் காவிரி ஆற்றின் கரையில் கட்டப்பட்டுள்ள இந்தக்கோயிலில்

 மூலவர் நாகேஸ்வரர், அமிர்வள்ளியுடன், சுப்பிரமணியர் வள்ளி தெய்வானை. வரதராஜபெருமாள் சீதேவி,

 பூதேவியுடனும், ஆஞ்சநேயர், கருடன், ஆகியோருடன் நவக்கிரகங்களும், கன்னிமூல கணபதி, ஸ்ரீ துர்க்கா,

 தட்சணாமூர்த்தி, நாகர் ஆகியோர் அருள் பாலிக்கின்றனர்.

மிகப்பழமையான இந்தக்கோயிலுக்கு  மன்னர்கள் காலத்தில் வழங்கப்பட்ட

 நிலங்கள்  நிறைய இருந்தும் தற்போது அவற்றால் இந்தக்கோயிலுக்கு பயன்கிடைக்காமல் உள்ளது.

கடந்த பத்தாண்டுகளுக்கு முன்னர் இந்தக்கோயிலின் நித்யபடிகளுக்கு  ரேஷனில் வழங்கப்படும் அரிசியை

பயன்படுத்தவேண்டிய நிலை இருந்தது.

 இது குறித்து அறிந்த சில பக்தர்கள் மனங்கலங்கி கோயிலுக்கு நித்ய படிகள்  செய்ய தங்களால்

இயன்றளவுக்கு உதவி புரிந்து வருகின்றனர். ராகு மற்றும் செவ்வாய் கிரகர்களின் தோஷங்களினால்

பாதிக்கப்பட்டவர்கள் இந்தக்கோயிலுக்கு வந்து வணங்கி சென்றால் கிரகங்களின் பார்வையினால் ஏற்படும்

பாதிப்புகள் அகன்று தொழில் அபிவிருத்தி, மற்றும் இல்லத்தில் அமைதி ஆகியவை பெறுவதாக

சொல்லப்படுகிறது

 இந்தக்கோயிலில் இந்து மதத்தை சாராதவர்களும் வந்து ஆராதனைகள் நடத்துவது வழக்கமாக உள்ளது.

இஸ்லாமிய சமுதாயத்தைச்சேர்ந்த பக்தர்களும் இந்தக்கோயிலுக்கு வந்திருந்து கோயிலில் அமைந்துள்ள

ஸ்ரீ துர்க்கைக்கு பாலாபிஸேகம் நடத்தி வழிபட்டு செல்வது வழக்கமாக உள்ளது. இந்தக்கோயிலின் சிறப்புகளை 

அறிந்த வெளிமாவட்ட  பக்தர்கள் சிலரும் கோயிலுக்கு வந்து வேண்டுதல் வைத்து வழிபடுவது வாடிக்கையாக

உள்ளது.

 தற்போது அய்யப்ப பக்தர்கள் அய்யப்பனின் சிலையை கோயிலில்  நிறுவி, வழிபட்டுவருகின்றனர்.

ஆண்டுதோறும்  சித்திரை மற்றும் கார்த்திகை, மார்கழி மாதங்களில் சபரிமலையில் நடைபெறுவது

 போன்றே காவிரியில் அய்யப்பனின் <உற்சவருக்கு ஆராட்டுக்கள் நடக்கின்றன. சபரியில் அய்யப்பனின் ஆராட்டு

நடக்கும் நடைபெறும் போது தெய்வ சங்கல்பங்களாக நடைபெறும் நிகழ்வுகள் இங்கு நடக்கின்றன.

கோயிலில் இருந்து உற்சவர் ஆராட்டுக்கு புறப்பட்டதிலிருந்து ஆராட்டு முடிந்து வழிபாடு பூர்த்தியாகும்

வரையில் உற்சவரை சுற்றியும், கோயிலைச்சுற்றியும் கருடன்கள் வட்டமிடுகின்றன.
  
நாகேஸ்வரர்கோயிலின் எதிரில் ஸ்ரீ ராகவேந்திரசுவாமியின் பிருந்தாவனம் அமைக்கப்பட்டு ஆண்டுதோறும்

வழிபாடு நடந்து வருகிறது. இது தவிர திருவண்ணாமலை சித்தர் என அழைக்கப்படும் ஸ்ரீ சேஷாத்திரி

சுவாமிகளின்  அதிஷ்டானம்  இங்கு அமைந்துள்ளதால் சுவாமிகளின் பக்தர்கள் ஆண்டுதோறும் நாட்டின்

பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்திருந்து சுவாமியின் வழிபாட்டை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

        ஊஞ்சலூரின் முதல் தெய்வமாகவும், முதல் கோயிலாகவும் அமைந்த நாகேஸ்வரர் கோயில் கட்டப்பட்டு

பல நூறு ஆண்டுகள் ஆனதால் கோயில் கட்டிடங்கள் மிக பழமையாகி பல்வேறு இடங்களில் சிதிலமடைந்துகாணப்படுகிறது.

தமிழக அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் <<உள்ள இந்தக்கோயில் புனரமைக்கப்படுவது

அவசியம். இது குறித்து கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்னர் பக்தர்கள் கோரிக்கை வைத்தபோது அப்போது

 அ.தி.மு.க அமைச்சரவையில் அமைச்சராக இருந்த அறநிலையத்துறை அமைச்சர்  கோயி<லுக்கு நேரில் வந்து

பார்வையிட்டுமிக விரைவில் கோயில் புனரமைக்கப்படும் என உறுதிகூறிச்சென்றார்.

ஆண்டுகள் பல கடந்த நிலையில் நாகேஸ்வரர்கோயிலில் புனரமைப்பு பணிகள் அரசின் சார்பில்

துவக்கப்படுவதற்கான எந்த அறிகுறிகளும்   இது வரை தென்படவில்லை.

 மன்னர்கள் காலத்தில் அமைக்கப்பட்ட இந்தக்கோயிலை பாதுகாத்து

கோயிலுக்காக தரப்பட்ட வருமான ஆதாரங்களை சரிபார்த்து பக்தர்களின் மனங்களையும்

கோயில் மூலவரின் மனத்தினையும்  குளிரச்செய்யலாமே?.
Download As PDF

மனிதாபிமானம்



















அன்று…
அவர்களை காணாமல்
என் மனம்
நிலவைக்காணாத வானமாய்
வெம்பிக்கிடந்தது.

எந்தநேரம்
நான் வீடு திரும்பினாலும்
முகம் கோணாமல்
என்னை வரவேற்கும்
அந்த மூவரும்
அன்று
என்னை வரவேற்க வரவில்லை.
நான் வீடு திரும்பும்
ஒவ்வொரு முறையும்
 அவர்களை சுற்றியபடி ஒரு கூட்டம்
கும்மாளம் இட்டுக்கொண்டிருக்கும்
தேசத்தின் பல பகுதிகளிலிருந்தும்

என்னைச் சந்திக்க வரும்
தூதுவர்கள்… அவர்கள் மூவரைச்சுற்றிலும்
அமர்ந்து கொண்டு கதைபேசிக்கொண்டிருப்பார்கள்.














நேரங்கடந்து வீடு வரும் நான்
அதைப்பற்றியெல்லாம் கண்டுகொள்ளாமல்
அவர்கள் மூவரையும் பார்த்தவுடன் பரவசம் கொள்வேன்.

அந்த பரவசத்திலும்….
சற்று பொறாமை கலந்திருக்கும்.
ஒரு மொழி மட்டுமே பேசத்தெரிந்த
என்னைச் சந்திக்கவரும் தூதுவர்களின்
பல பாஷைகளையெல்லாம் தெரிந்து வைத்து
அவர்களை வரவேற்று உபசரித்து
என்னைச் சந்திக்க வைக்கும்
அந்த மூவரைச்சுற்றிலும்
கூட்டம் கூடுவதில் வியப்பில்லை.
அந்த மூவரில்…
மூத்தவள்..
சற்று உடல் பருத்தவள்
பரந்த மனம் படைத்தவள்.
ஊரெல்லாம் என் உறவுதான்
என்று
உரிமை கொண்டாடி அடைக்கலம் நாடுவோருக்கு
யோசிக்காமலே இடம் தருவாள்.

 
















இதனால்
மற்று இருவரையும் விட
 இவளிடம் கூட்டம் சற்று அதிகமாகத்தானிருக்கும்.

இரண்டாவது பெண் மௌனி.
எப்போதாவது சிரிப்பாள்..
அந்த சிரிப்பு.. எல்லோர் மனதையுமே
வயது பேதம் பாராமல்
சஞ்சலப்படுத்துவதாய் இருக்கும்.
சிரிப்பதற்கும் கால நேரம் பார்க்கும்
இவளிடம் கூட்டம் சற்று குறைவாகத்தானிருக்கும்.
மூன்றாவது பெண்
உறுதியானவள்
உழைப்பதற்கு அஞ்சாதவள்
உறங்குவது முதல்
விழிப்பது வரை
என்னைக் கவனித்துக்கொள்வதில் கெட்டிக்காரி.
இவள் மீது மட்டும் எனக்கு சற்று கூடுதலான
அன்பு உண்டு.
இவளது முன்னோர்கள்
அந்தக்காலத்தில் ஏதோ ஒரு அரசனின்….
ஆசைநாயகிளாய் இருந்தவர்களாம்.
அந்த அரசனின் மார்பை தழுவியபடியே
அவனை விட்டு நீங்காமல் இருப்பார்களாம்.
இவர்களின் தழுவலைப்பார்த மற்ற மன்னர்களும்
அந்த அரசன் மீது பொறாமை கொண்டு
போர்தொடுப்பார்களாம்.
அப்படிப்பட்ட
வம்சத்தில் வந்த இவளை மட்டும்
ஏனோ எனக்கு மிகவும் பிடிக்கும்.

அன்று…
மிகுந்த வேளைப்பழுவினால்
வெளியில் சுற்றிவிட்டு வீடு திரும்ப
நேரமாகிவிட்டது.
கடுமையான காற்று மழை வேறு
மேகங்களின் வேகத்தைக்கண்டு
நிலவு முக்காடிட்டுக்கொண்டது.

கள்ளுண்டவனின்  கண்களைப்போல்
மின் விளக்குகள் கண்களை மூடிக்கொண்டிருந்தன.
பொறாமை கொண்டோர் நெஞ்சைப்போல்
ஊர் இருளை போர்த்திக்கொண்டிருந்தது.
 கருமியின் தானம்போல
மின்னலின் ஒளியில் கால்கள் பாதையை துழாவ
ஒரு வழியாய் வீடு வந்து சேர்ந்தேன்.
எப்பொழுது நான் வீடு திரும்பும்போதும்
மற்றவர்கள் கேலியும் சிரிப்புமாய்
கும்மாளமிட்டுக்கொண்டிருக்க
அவற்றை ரசித்தபடி
அந்த மூவரும் என்னை
இன்முகத்துடன் வரவேற்பார்கள்.
களைத்துச்சோர்ந்து  கோபத்துடன் வரும் நான்
இவர்களது இன்முகம் கண்டதும் சமாதானமடைந்து
உணவை உண்டு விட்டு <உறங்கச்செல்வேன்.

நான் உறங்கும்போதும்
என் உறக்கத்தை சுகமாக்க
மூன்றாவது பெண் தன் சேலையால்
விசிறிக்கொண்டு நிற்பாள்.

அவளிடம்
எனது கண்களினால் பேசியபடியே
ஆனந்தமாய் நித்திரை அடைவேன்.

அதிகாலை…
எழுந்து பார்த்தால்…
அந்த மூன்றாவது பெண்ணே
எனக்கு முகம் காட்டுவாள்.

அந்த நேரத்திலும்
அவளைச்சுற்றிபடி
உற்சாக கூச்சலிட்டவாறு…
கூட்டமொன்று குதுகளித்தபடி இருக்கும்.
 











அவற்றை கண்டுகொள்ளாமல்
சூரியனைக் காணும் தாமரையாய்
என்னைக் கண்டதும் அவள் முகம் மலரும்.

இவளுக்கு
ஒரு விசித்திரமான பழக்கம் உண்டு.
மற்ற இருவரும் வெயிலைக்கண்டால் பயந்து நிற்க
இவள் மட்டும்
நாள்  முழுவதும் வெயிலில் நின்றுகொண்டே
வீட்டு வரவு செலவுகளை கவனிப்பாள்.

நோய் என இவளை அணுகினாள்
தாயாய் இருந்து நோய் தீர்ப்பதில் வல்லவள் இவள்.

மூத்தவளை  விட சற்று இளையவள் இவளது
உழைப்பு எனக்கு மிகவும் பிடிக்கும்.

ஆனால்….
அன்று இவர்கள் மூவரையுமே காணவில்லை.
பலூனுக்குள் அடைபட்ட காற்றாய்
விடை தெரியாத தவிப்பு மனதை
சிதறடித்துக்கொண்டிருந்தது.
எங்கு போய் தொலைந்தார்கள் மூவரும்?!
கும்மாளமிடும் கூட்டத்தையும் காணோமே?!

மயான அமைதி நிலவுகிறதே?
என்னவாயிற்று?
ஏதாவது விபரீதம்மோ?
என்று….
கேள்வி அலைகள்
சிந்தனையில் மோதிக்கொண்டிருந்தன.
சரி….
காலையில் பார்த்துகொள்வோம்
என
மனதுக்கு சமாதான மிட்டாயை கொடுத்தபடி
உறக்கத்தோட்டைக் கழற்றும் முயற்சியில்
இரவு உணவை உண்ணாமலே வெற்றிபெற்றேன்.




















 சூரியக்கதிர்கள்  பூமிப்பந்தைத்தொட்ட
அதிகாலைப்பொழுதில்: என்
வீட்டு முன்பு ஒரே ஆராவாரம்.

உறக்கபோர்வையை < உதறிவிட்டு
திடுக்கிட்டு  எழுந்து பார்த்தேன்….
கண்ணேதிரே கண்ட காட்சி……
என்
இதயத்துடிப்பை நிறுத்தி வைத்தது.
அவர்கள் …
மூவரும் கோரமாக அடிபட்டு பிணங்களாய்
சாலையில் கிடக்க…
வருத்தக்குறிகளுடன் மக்கள் வெள்ளம்
அவர்களைச் சுற்றி.

என்னசெய்வது?
விதிமுடிந்து விட்டது…
போக்குவரத்து தடைபடுகிறது…
சீக்கிரம் வரச்சொல்லுங்கள் ..ஆட்களை
ஆளுக்கு ஒரு பக்கம் தூக்குங்கள்…
அறுப்பது துரிதமாகட்டும்…
அதிகாரிகள் வந்த பிறகு சொல்லிக்கொள்வோம்…
என்று…
உத்தரவுகள் இட்டுக்கொண்டிருந்தவரைப்பார்த்தேன்..
நேற்று வரை
அவர்கள் மூவரின்
நிழலில் ஓய்வெடுத்த அவரின்
மனிதாபிமானம் கண்டு
என்னைப்பார்த்து
ஏதோ சொல்லிக்கொண்டிருந்தன
 












அந்த மரங்கள் மூன்றும்.

Download As PDF

நிர்வாணம்….

உனது…
உதடுகள் ஒன்று குவிந்த ..
நேற்றைய பொழுதில்
கற்றை சருகுகளாயின
எனது குறிஞ்சிப்பூக்கள்.















நிர்வாணம்….
மானிட வாழ்வின்
தத்துவம் என்பது புரிதலானது.
மாற்றங்கள் மாற்றங்களை உருவாக்குவதில்
மாறாமல் உள்ளன: என்பதை
அறிய முடிந்தபோது…
எனக்குள் ஏனோ
ஒரு யுக நித்திரை ஆயாசம்.

இது நாள் வரை…
எனக்கு ..
இரவுகள் பகல்களாக தெரிந்தன
இப்பொழுது…
பகலும் இரவும் இல்லாமல்
மோன நிலைக்குள்
மூழ்கி கிடக்கிறேன்.
இந்த நிலை
பிரபஞ்சத்தின் பிறப்புறுப்புகளை
அறுத்தெரியும் மர்மத்தை   எனக்கு
சொல்லிக் கொடுப்பதாய் உணர்கிறேன்.

எனது
உறக்கத்தோடுகள் கழற்றப்பட்டதற்கு
உனது
 கவிதைகள்  காரணம் அல்ல என்று
மறுக்கப்பட்டபோது….
சற்று முன் வரை
பிரபஞ்சத்தின்
மாயச்சுழலில் மறைந்திருந்த
நிர்வாணம் சற்றே கண்சிமிட்டியது
என்னைப்பார்த்து.

நிர்வாணம் என்பது
ஆடைகளைவது என்பதை
என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை..
அது…
பாலுக்கு போர்த்தப்பட்டதாகவே
எண்ணவேண்டும்.
நிர்வாணம் என்பது
ஆசைகளைவதும், ஆசை சிதைவதும்
என்பதாகவே ….
ஏற்றுக்கொள்ளவேண்டும்.
இந்த இரண்டுக்கும்
இடையில் தான் அதன் மாயக்கரங்கள் உள்ளன.
என்விஷயத்தில்
நான்
நிர்வாணப்படுவதை ரசிக்கிறேன்.
அது
 என்னை
முழுமையாக
தழுவிக்கொள்ள அனுமதிக்கிறேன்.
இந்த
யுகப்பேரோசையில்
ஆன்மாவின் காதுகள்
அடைபடாமல் காத்துக்கொள்ள
எனக்கு தரப்பட்ட வாய்ப்பாகவே
அதனை உணர்கிறேன்.
 பல பிறவிகளில்
பல தவங்களில்
பல முயற்சிகளில்
இதனை அடைய பலர்
முயன்று தோற்றிருக்கிலாம்.
இதனை அடையும் முயற்ச்சியில்
நான் அவ்வப்போது வெற்றிபெறுகிறேன்.
அவ்வப்போது தோற்கிறேன்.
நிரந்தர நிர்வாணத்தைத்தேடிச்செல்லும்
 எனது
பயணத்தின் தொலைவு
பக்கமிருக்கிறது என்ற
நம்பிக்கையில்
எனக்குள் முளைத்த
நாற்றுக்கள் இன்னும்
வாடாமல் <உள்ளன.
இந்த நாற்றுக்கள் முற்றும் முன்
நான் இந்த பிரபஞ்சத்தை வெற்றிகொள்வேன்
நிர்வாணத்தால்.
 
--------------------------------------------------------------------
Download As PDF