வருகை தந்தமைக்கு நன்றி..

சனி, 27 ஆகஸ்ட், 2011

புலிகளின் விமானங்கள் திணறும் புலனாய்வு துறை.

                                                                       
                                                        புலிகளின் விமானங்கள்

                                                      திணறும்  புலனாய்வு துறை.

 தமிழீழ விடுதலைப்புலிகளிடம் மொத்தம் 4 விமானங்கள் இருந்ததாகவும், அதில் ஒன்று கிளைடர் விமானம் என்றும்

 அறியப்படுகிறது.

இறுதி யுத்தத்தின்போது கொழும்புநோக்கி இரண்டு விமானங்கள் சென்றபோது அவை அழிந்ததாகவும், கூறப்படுகிறது.

 இந்த நிலையில் புலிகளிடம் இருந்த மற்ற இரு விமானங்களைத்தேடும் பணியை

இலங்கையின் புலனாய்வு பிரிவு முடுக்கி விட்டிருந்தது.

 இது வரை அந்த இரண்டு விமானங்களும் கண்டுபிடிக்கப்படவில்லை.

 கடந்த சில நாட்களுக்கு முன்னர் இலங்கையின் வான் பரப்பில் பத்து அமெரிக்க போர்விமானங்கள் பறந்ததாகவும்

 அவை இலங்கையின் அனுமதியின்றி பறந்ததாகவும், பசிபிக் பெருங்கடலில் நிறுத்தி

வைக்கப்பட்டிருந்த  அமெரிக்காவின் போர்கப்பலில் இருந்து புறப்பட்ட அந்த விமானங்கள்

 இலங்கையின் வான் பரப்பில் அத்துமீறி பறந்தன  என்று இலங்கை அரசால் கூறப்பட்டு வந்ததது.

  இலங்கையின் சிவில் விமானத்துறையின் ரேடார் பார்வையில் அமெரிக்க விமானங்கள் பறந்தது தெரிந்ததாக

 இலங்கை விமானப்படை உறுதி செய்திருந்தது.

இது குறித்த மறுப்பை அமெரிக்க தரப்பு கூறியபோது

 இலங்கையில் பொருத்தப்பட்டுள்ள ரேடார் 200 கடல் மைல்

தொலைவு வரை கண்காணிக்ககூடியவை அந்த எல்லை வரை நாங்கள் கண்காணிப்போம் என்று இலங்கையின்

 விமானப்படை செய்தியாளர் தரப்பில்   பதில் தரப்பட்டது.

  அமெரிக்காவுக்கு இது குறித்த எரிச்சல் ஏற்பட்ட நிலையில் இலங்கை மந்திரி பேசும் போது இலங்கையின்

  கடல் எல்லை12 மைல் தொலைவு வரையே  உள்ளது.

அமெரிக்கவிமானங்கள் அந்த எல்லைக்குள் அப்பால் தான் பறந்ததாக கூறினார்.

                                                          

         சீனா மற்றும் இந்தியாவிடமிருந்து வாங்கப்பட்ட ரேடார்கள் தற்போது இலங்கையில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

 இவை இரண்டுமே குறுகிய தொலைவு தாழ்வான மற்றும் குறுகிய தொலைவு வரை மட்டுமே

 கண்காணிக்கும் திறன் பெற்றவை.

இந்த நிலையில் தாங்கள் எங்கு பறக்கிறோம், என்பது உள்ளிட்ட தகவல்களை அறியத்தருகிற

அதிநவீன வசதிபடைத்த அமெரிக்கபோர்விமானங்கள்

ரேடார்களின் கண்னுக்கு எட்டாத உயரத்தில் பறக்கும் சக்தி படைத்தவை அவை இலங்கையின்

ரேடார் பார்வைக்குள் சிக்க முடியாது என்ற கருத்தும் உள்ளது.

   எது எப்படி இருந்தபோதிலும் பசிபிக் கடல் பிராந்தியத்தில் இருந்து இந்து மகாசமுத்திரத்தை நோக்கி

 அமெரிக்கபோர்கப்பல் நகர்ந்தபோது அமெரிக்கவிமானங்கள் பறந்ததாக சொல்லப்பட்ட இந்த நிகழ்வுகளில் ஒரு வித

அசைவு தெரிவதாக அறியப்படுகிறது.

      தற்போது இலங்கை தனது கடல் படையையும், விமானப்படையையும் பலப்படுத்திவருவது

இலங்கை இறுதி யுத்தத்தின்போது நடந்துகொண்ட முறையையும், தற்போது நடந்துவரும் நிலையையும்

பார்க்கும்போது அது ஏதோ ஒரு வித பீதியில் உறைந்திருப்பதை அறிய முடிகிறது.

Download As PDF

லோக்பால்... தீர்மானம் நிறைவேற்றம்.

                                                                         



                                வலுவான லோக்பால்... தீர்மானம்   நிறைவேற்றம்.

           அன்னாஹசாரே கொண்டுவந்த வலுவானலோக்பால் கோரிக்கை குறித்த போராட்டத்துக்கு நிறைவு

  தரும் விதமாக மக்களவையில் தீர்மானம்   நிறைவேறியது.
 
  நாடாளுமன்றத்தில் அமைச்சர் பிரணாப்முகர்ஜி  லோக்பால் குறித்த தீர்மானம் கொண்டு வந்தார்.

  ஹசாரேயின் முக்கிய தீர்மானங்கள் குறித்து  பரிசீலிக்கவேண்டும் என நிலைக்குழு வலியுறுத்தியது.

     மக்களவையில் தீர்மானம் குறித்த வாக்கெடுப்பு நடந்தபோது உறுப்பினர்கள் குரல் வாக்கெடுப்பின்

 மூலம் தீர்மானத்தை நிறைவேற்றினர். இதனை  சபாநாயகர் ஏற்றுக்கொண்டார்.

   அவையில் நடந்த தீர்மானம் குறித்த விளக்கத்தினை மராட்டிய மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு

  அதனை அந்த மாநிலத்தை சேர்ந்த அமைச்சர்  விலாஷ்ராவ் தேஷ்முக் கொண்டு சேர்க்கிறார்.

   அவையில் தீர்மானம் நிறைவேறியது குறித்து அறிந்த ஹசாரே குழுவினர் தங்களது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளனர்.

       இதற்கிடையே பா.ஜ கட்சி  அன்னாஹசாரேவின் உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்ள கேட்டுள்ளது.

        ஞாயிற்றுக்கிழமையுடன் அவரது போராட்டம் முடிவுக்கு வரும் என  எதிர்பார்க்கப்படுகிறது.
Download As PDF

தமிழக முதல்வருக்கு இலங்கை அழைப்பு

                                                                                         

                                     தமிழக முதல்வருக்கு இலங்கை அழைப்பு
               
                                                                                            
                          தமிழக முதல்வர்  ஜெயலலிதா மற்றும் லோக்சபாவின்  எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மாசுவராஜ்

               ஆகியோரை இலங்கைக்கு வருமாறு இலங்கையின் சபாநாயகர் அழைப்பு விடுத்திருக்கிறார்.

                 என்ற தகவலை  மத்திய அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.                             




          

Download As PDF

தமிழுக்கு மரியாதை தந்த தைவான்....

                                                                             
                                                 தமிழுக்கு மரியாதை தந்த தைவான்....


தைவான் நாட்டைச்சேர்ந்த கிறிஸ்யோ என்ற சிற்பியால் த மூன்றரை டன் எடை கொண்ட

அமைதியின் சின்னமான மணி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. அந்த மணியில்

தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளது.

அமைதிக்கான மணியாக உருவாக்கப்பட்ட இதனை தைவான் அரசு தனது  மற்றும் சீனா ஆகிய  இரு

  நாட்டின் எல்லைகளும் சந்திக்கும் இடத்தில் பொருத்தியுள்ளனர்.
 

 சீனாவின் ஆதிக்கத்தில் இருக்க விரும்பால் தன்னை தனிசுதந்திர நாடாக அறிவித்துக்கொண்ட

 தைவானை அழிக்கும் நோக்குடன் கடந்த 58 ம் ஆண்டு ஆகஸ்ட்டு மாதத்தில் சீனபடைகள்

 தைவானின் மீது ஏவுகணைகளை வீசின.

  தொடர்ந்து 44 நாட்கள் வீசப்பட்ட இந்த ஏவுகணைகள், எண்ணிக்கையில் 5 லட்சமாக இருந்தன.

   இந்த ஏவுகணைகளிலிருந்து தயாரிக்கப்பட்டதுதான் இந்த அமைதிக்கான

   மணி என்பது குறிப்பிடத்தக்கது.

     கடந்த 49 ம் ஆண்டில் இருந்து சுதந்திர நாடாக செயல்பட்டுவரும் தைவானுக்கு  விடுதலைப்புலிகளுக்கும்,

 இலங்கை அரசுக்கும் சமாதானம் செய்விக்க வந்த நார்வே நாடு

சமாதானத்துக்கான பரிசை தர சீனாவைச்சேர்ந்த மனிதஉரிமையாளருக்கு தரவந்தது. சீன அரசு அவர்

மீது நடவடிக்கை எடுக்க முயன்றபோது அவருக்கு தைவான்  அடைக்கலம் தந்தது.

  சமாதானப்பரிசை தரவந்த நார்வே நாட்டின் மீது கோபம் கொண்ட சீனா அந்த நாட்டுக்கு எச்சரிக்கை விடுத்தது.

நார்வே நடத்திவந்த இலங்கை சமாதானபேச்சை குலைக்கும் நோக்கத்துடன் இலங்கைக்கு

 பல லட்சக்கணக்கான ஏவுகணைகளை வழங்கியது.

அந்த ஏவுகணைகள் தான் தமிழர்கள் மீது வீசப்பட்டு தமிழர்களை கொன்று குவித்தது.

   இதற்கு பதிலடி தரும் விதமாக தற்போது தைவான் அரசு சீனாவின் ஏவுகணைகளை பயன்படுத்தி தயாரித்த

மணியில் அமைதி  என்ற சொல்லை பொறித்து சீனாவின் எல்லைப்பகுதியில் உள்ள கியான்மென்தீவில் நிறுத்தி உள்ளது.

இந்த தீவானது கடந்த 100 ஆண்டுகளாக ராணுவ மையமாக செயற்பட்டு வருகிறது.

அமெரிக்காவின் அரவணைப்பில் உள்ள இந்த தீவில் தற்போது பத்தாயிரம் வீரர்கள் பாதுகாப்பில் உள்ளனர்.

அந்த பத்தாயிரம் பேர் பாதுகாப்பில் தற்போது தமிழ் மணி உள்ளது குறிப்பிடத்தக்கது. 
Download As PDF

வெள்ளி, 26 ஆகஸ்ட், 2011

அன்னாஹசாரேவுக்கு ஆதரவாக தீக்குளிப்பு



                                                           
                                                                    

                    அன்னாஹசாரேவுக்கு ஆதரவாக தீக்குளிப்பு

                                             
லோக்பால் மசோதாவை அமல்படுத்தக்கோரி சமூக சேவகர் அன்னாஹசாரே

டெல்லி ராம்லீலா  மைதானத்தில் நடத்திவரும் 10 நாட்களை தொட்ட

நிலையில்...

அவரது ஆதரவாளர் ஒருவர்  தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

            டெல்லி ராஜ்காட்டில் உடல் முழுவதும் தீக்காயம் பட்ட நிலையில்

வாலிபர் ஒருவர்கிடந்துள்ளார். அவரை மீட்ட மக்கள் மருத்துவமனையில்

சேர்த்தனர்.சிகிச்சை பயனின்றி   அவர் இறந்தார்.

முன்னதாக அவரிடம் நடத்திய விசாரணையில் அவரது பெயர் தினேஷ்குமார்

யாதவ்என்பதும் பீகாரை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.

நாடு முழுவதும் அன்னாஹசாரேவின் அனல் வீசிக்கொண்டிருக்கும்

நிலையில் தமிழகத்தில்தற்போது பிரளயமே நடப்பதுபோல் காட்சிகள்

அரங்கேறி வருகின்றன. ஒன்று அன்னாஹசாரேவுக்கானஆதரவுப்போராட்டம்,

மற்றொன்று ராஜிவ்கொலை வழக்கில் தூக்கு தண்டணைநிறைவேற்றத்துக்காக

தயாராகிவரும் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரை விடுவிக்ககோரி

நடந்துவரும் போராட்டம்.

நேற்று இவர்களுக்காக சென்னையை சேர்ந்த வழக்கறிஞர்கள் போராட்டம்

நடத்தினர்.

சட்டக்கல்லூரிமாணவர்கள் ரயில் பாதையில் தலை வைத்து போராட்டம்

நடத்தினர்.

அடுத்து வேலூர் மாவட்டம்

ஜோலார்பேட்டையில் நூற்றுக்கணக்கான மக்கள் சேர்ந்து உண்ணாவிரதம்

இருந்தனர்.

 தூக்கு தண்டணை விதிக்கப்பட்டவர்களின் விஷயத்தில் தமிழக முதல்வர்

என்ன செய்யப்போகிறார்? என்பதை அறிந்து கொள்ளும் ஆர்வத்தில் தமிழகம்

மட்டும் அல்லாது  உலக நாடுகளும் உள்ளன.


                                                                     


                               மகன் உயிர் விடும் முன்பே மாய்வோம்...
                                                      தந்தை குமுறல்....


எனது மகன் உயிர்விடும் முன்பே வேலூர் சிறை முன்பு  தற்கொலை செய்துகொள்வோம்

என்று தூக்கு தண்டணை விதிக்கப்பட்ட பேரறிவாளனின் தந்தை பேசினார்.

ராஜிவ் கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட மூவரையும் தூக்கிலிடக்கூடாது என வலியுறுத்தி

 வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில்

பெருந்திரளானோர் உண்ணாவிரதம் இருந்தனர்.

அந்த உண்ணாவிரதத்தில் தண்டணை விதிக்கப்பட்ட பேரறிவாளனின் தந்தை குயில்தாசன் கலந்துகொண்டு பேசினார். அவர் பேசியதாவது: எனது மகன்
பேரறிவாளன் உயிர் விடுவதற்கு முன்பே வேலூர் சிறை வாசலில் நாங்கள் குடும்பத்துடன் உயிரை விடுவோம்.

எனது மகனின் உயிரை தமிழக முதல்வர் ஜெயலலிதா காப்பாற்றவேண்டும்.

செய்யாத குற்றத்துக்காக எனது மகன் 21 ஆண்டுகள் சிறையில் இருக்கிறான். அப்பாவியான

அவன் உயிரை பறிக்க நினைக்கிறார்கள். அவனது உயிர் போகும் முன்பே நாங்கள் குடும்பத்துடன் உயிரை விடுவோம் என்றார்.

இதற்கிடையே வேலூர் சிறையில் தமிழக காவல்துறையின் சிறப்பு போலிசார் கொண்ட படை

குவிக்கப்பட்டிருக்கிறது. உலக நாடுகளின் உன்னிப்பான பார்வையில் தற்போது வேலூர் சிறைச்சாலை உள்ளது.

                                                                            
                                    பேரறிவாளன், சாந்தன், முருகனுக்காக
                                                 ராம்ஜெத்மலானி.                                           

                                  
 ராஜிவ் கொலை வழக்கில் தூக்கு தண்டணை விதிக்கப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன்
ஆகியோருக்கு அடுத்த மாதம் தூக்கு உறுதி என்ற நிலையில் அவர்களுக்கு ஆதரவாக வழக்காட வருகிறார்
பிரபல வக்கீல் ராம்ஜெத்மலானி. வருகிற திங்கள் கிழமை  ஆகஸ்ட் 29 ம்தேதி சென்னை <<உயர்நீதி
மன்றத்தில் தண்டணையை நிறுத்தி வைக்ககோரி  தண்டணை விதிக்கப்பட்டவர்களின் சார்பில் வாதிட
உள்ளார்.
Download As PDF

ஆதரவு பொதுக்கூட்டம்...

                                                      ஆதரவு பொதுக்கூட்டம்...
                                              
                                                       
      ஈரோடு மாவட்டம்      கொடுமுடியில்   சமூக ஆர்வலர்   அண்ணா

ஹசாரேவின் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆதரித்து பொதுக்கூட்டம்

நடைபெற்றது.

    கூட்டத்திற்கு   டாக்டர் கே.நடராஜன் தலைமை வகித்தார்.

   சுதந்திர போராட்ட தியாகி கே.கே.முத்துசாமி முன்னிலை வகித்தார்.

   சமூக ஆர்வலர் சி.பெரியசாமி வரவேற்றார்.

  கூட்டத்தில், 

   மத்திய  அரசு, வலிமையான  ஜனலோக்பால் சட்டத்தை அமல்படுத்தவும்,

   பிரதமர் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளை உள்ளடக்கிய லோக்பால்

  மசோதா நிறைவேற்றப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

   சமூக ஆர்வலர் எஸ்.ஆறுமுகம், வழக்குரைஞர் கார்த்திகேயன், நுகர்வோர்

 பாதுகாப்பு மைய இணைச் செயலர் ஆ.ராஜசுப்ரமணியன், எல்ஐசி முகவர்கள்

சங்கதுணைச் செயலர் பி.செல்லமுத்து, ஓய்வூதியர் சங்க மாவட்ட தலைவர்

 சுப்ரமணியண், காகம் தொண்டு நிறுவன நிர்வாகிகள் கனகராஜ், ராஜன்

 உள்ளிட்டோர் பேசினர்.

Download As PDF

பார்த்தீனியம் ஒழிப்பு ...

                                                        
                                                        பார்த்தீனியம்  ஒழிப்பு ....

கொடுமுடி  அருகே சாலைப்புதூரில்  வேளாண்மைத்துறை சார்பில் 

பார்த்தீனியம் ஒழிப்பு முகாம்

நடைபெற்றது.  தோட்டக்கலை உதவி இயக்குநர்

பி.ஜி.துரைராஜ், வேளாண் அலுவலர் யு.சதீஸ்குமார், உதவி வேளாண் அலுவலர்

எஸ்.வெங்கடேசன்,    முன்னாள் அமைச்சர் ராமசாமி,

சென்னசமுத்திரம் பேரூராட்சி தலைவர் பத்மா குழந்தைவேல்,

ஆத்மா திட்ட தலைவர் பி.கந்தசாமி மற்றும் விவசாயிகள் உள்ளிட்டோர்

பங்கேற்றனர்.






Download As PDF

சமச்சீர் கல்வி ... தமிழக அரசின் திட்டங்கள்





 
                              சமச்சீர் கல்வி ... தமிழக அரசின்  திட்டங்கள்

 உண்மையான சமச்சீர் கல்வி கிடைக்க  சில திட்டங்களை நடைமுறைக்குக் கொண்டு வருவதாக

முதல்வர் ஜெயலலிதா இன்று அறிவித்தார்.

அவரது அறிவிப்பின் துளிகள்:-

  65 துவக்கப்பள்ளிகள் நடுநிலைப்பள்ளிகளாகவும், 710 நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும்

தரம் உயர்த்தப்படும்.

9735பட்டதாரி ஆசிரியர்கள், 3565 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் இந்த ஆண்டில் நிரப்பப்படும்.

 பள்ளிகளில் தொழிற்கல்வி, உடற்கல்வி உள்ளிட்ட ஆசிரியர் பணியிடங்களுக்கு, ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் 16549 பகுதி நேர ஆசிரியர் பணி இடங்கள்
நிரப்பப்படும்.

இதனால் 6,7,8 ஆம் வகுப்பு பள்ளி மாணவர்கள் பயன்பெறுவர்.

  பள்ளிகளில் கழிப்பறைகள், வகுப்பறைகள், ஆய்வகங்கள் என சீரமைப்பு மேற்கொள்வதற்கு, ரூ.1082.71 கோடி செலவில் பணிகள் மேற்கொள்ளப்படும்.

நிலை உயர்த்தப்பட்ட மேல்நிலைப்பள்ளிகளில் 3187 முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.

எல்லா மாணவ மாணவிகளுக்கும் பாடப்புத்தகங்கள் ஒரே மாதிரியாக அளிக்கப்படுவது போல் எல்லாருக்கும் ஒரே மாதிரியாக புத்தகப் பைகள்
கொடுக்கப்படவுள்ளன.

கணக்கு உபகரண(ஜியாமெண்ட்ரி பாக்ஸ்), வண்ண பென்சில்கள், புவியியல் வரைபடம் ஆகியவை வரும் கல்வியாண்டு முதல் வழங்கப்படும்.

 ஆசிரியர் அல்லாத பணியிடங்களாக, துப்புரவுப் பணியாளர்கள் உள்ளிட்ட 5000 பணியிடங்கள் புதிதாக நிரப்பப்படும் ,

ஒரே வருடத்தில் புத்தகத்தை மூன்று பருவங்களுக்கு மூன்று தொகுப்பாகப் பிரித்து முப்பருவ முறை கொண்டுவரப்படும் , இதன்மூலம் பள்ளிக் குழந்தைகள்
புத்தகச் சுமையைக் குறைக்க முடியும், எளிதாகக் கையாள இயலும்.

பத்து, பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி மதிப்பெண் பட்டியல் இனி மாணவர்களின் புகைப்படம் ஒட்டப்பட்டு,

தொழில்நுட்பம் சார் ரகசியக் குறியீடு இருக்கும் வகையில் வழங்கப்படவுள்ளது. மாணவர்களின் சிந்தனைத் திறனை

 ஊக்குவிக்க 7 முதல் 15 வயது வரையுள்ள மாணவர்களுக்கு செஸ் போட்டிகள் நடத்தப்படும்.

அரசு தொடக்க மற்றும் உயர்நிலை, நடுநிலை, மேல்நிலைப்பள்ளி வகுப்பு கற்றல் கற்பித்தலை

 மேம்படுத்த தகவல் தொழில்நுட்ப திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இது பள்ளி ஆசிரியர்களுக்கான திட்டமாக செயல்படுத்தப்படும்.

இதன்மூலம் ஆசிரியர்களுக்கான தனிப் பயிற்சி திட்டம் உருவாக்கப்படும்.

அனைத்து மாணவர்களுக்கும் தரமான கணணி மூலமான நவீனக் கல்வி கிடைக்க செயற்கைக் கோள் மூலம்

 பாடங்களைப் பார்க்க வசதி ஏற்படுத்தப்படும்.

தமிழக ஆளுனராகிறார் ரோசையா...

  

                                                    
                                       தமிழக ஆளுனராகிறார் ரோசையா...

தமிழகத்துக்கு புதிய கவர்னரை நியமிப்பது குறித்து மத்திய அரசு முடிவு.

தற்போதைய தமிழக கவர்னர் பர்னாலாவின் பதவிக்காலம் சென்ற ஜீலை மாதத்துடன் முடிவடைந்தது.

இவருக்கு பதிலாக புதிய கவர்னரை நியமிக்கும் யோசனையில் இருந்த மத்திய அரசு ஆலோனையில்,

 ஆந்திராவின் முன்னாள் முதல்வர் ரோசையா தமிழகத்தின் புதிய கவர்னர் பதவிக்கு சிபாரிசு செய்யப்பட்டார்.

அதனை ஏற்ற மத்திய அரசு ரோசையாவை தமிழக கவர்னராக நியமிக்க முடிவு செய்துள்ளது.

ஆந்திர மாநில காங்கிரஸின் மூத்ததலைவரான ரோசையாவுக்கு 79 வயதாகிறது.கடந்த 79 ம் ஆண்டு முதல்

ஆந்திர சட்சபையில் ஐந்து காங்கிரஸ் முதல்வர்களின் தலைமையில் மந்திரியாக இருந்துள்ளார்.

கட்சியில் 50 ஆண்டுகளுக்கும் மேல் பணி ஆற்றியுள்ளார். ராஜசேகர ரெட்டியின் மந்திரி சபையில் இடம் பெற்றிருந்த

 இவர் ராஜசேகர ரெட்டியின் மறைவுக்கு பின்னர் ஆந்திர முதல்வர் ஆனால், தொடர்ந்து எழுந்த பல்வேறு சர்ச்சைகளால்

முதல்வர் பதவியை துறந்தார். கடந்த 98ம் ஆண்டில் எம்.பி ஆகவும் இருந்துள்ளார்.

 தற்போது எம்.எல்.ஏ,வாக இருந்து வரும் ரோசையா அந்த பதவியை ராஜினாமா செய்துவிட்டு

 தமிழக கவர்னராக பதவி ஏற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Download As PDF

நீதியின் பெயரால் கொலை



நீதியின் பெயரால் 

கொலை செய்வது 

             தீர்வாகுமா?

மரணக் குழிக்குள் தள்ளும் கையெழுத்துக்கு, கருணை மனு என்று பெயர் வைத்தது யார்?


மரணக் குழிக்குள் தள்ளும் கையெழுத்துக்கு, கருணை மனு என்று பெயர் வைத்தது யார்?

ராஜீவ் கொலை மட்டும் அல்ல… எல்லாக் கொலைகளும் கண்டிக்கத்தக்கவை, பயங்கரமானவை, ஆதரிக்க முடியாதவை!

ஆனால், அநியாயத்தின் பெயரால் செய்யப்பட்ட கொலைக்குத் தண்டனையாக, நீதியின் பெயரால் கொலை செய்வது தீர்வாகுமா? கொலை செய்தவனைக் கொலை செய்வதுதான் தீர்வா? கண்ணுக்குக் கண்… பல்லுக்குப் பல்… என்று சொல்லக்கூடிய காட்டுமிராண்டிக் காலம் இருந்தது என்றால், இப்போது நடப்பதற்கு என்ன பெயர்?

மொழி எல்லைகளைக் கடந்து, இந்தியா முழுவதும் இருக்கும் மனித உரிமை ஆர்வலர்கள் எழுப்பி வரும் கேள்வி இதுதான்!

இந்தக் கேள்விக்கு இறுதி விடை சொல்லாமலேயே, பேரறிவாளன் (எ) அறிவு, தாஸ் (எ) முருகன், ரவிராஜ் (எ) சாந்தன் ஆகிய மூன்று உயிர்களைத் தூக்கு மேடையில் நிறுத்த இந்தியக் குடியரசுத் தலைவர் தயாராகிவிட்டார்.

பழ.நெடுமாறன், வைகோ, திருமாவளவன், சீமான் போன்றவர்கள் விடுதலைப் புலிகளை ஆதரிப்பவர்கள். ஆனால், புலிகளையோ, பிரபாகரனையோ தெரியாத மகாத்மா காந்தி சொன்னதையாவது கேட்க வேண்டாமா? ‘குற்றவாளிக்கு உரிய மன நோய் மருத்துவமனைதான் சிறைச்சாலை. அது கொலைக் களம் அல்ல’ என்றவர், ‘உயிர் இறைவனால் அளிக்கப்பட்டது. அதனைப் பறிக்க, அவனைத் தவிர வேறு யாருக்கும் உரிமை இல்லை’ என்றார்.

காந்தி சொன்ன எதையுமே கேட்கவில்லை காங்கிரஸ். இதை மட்டுமாவது கேட்கக் கூடாதா?

1991 மே 21 – ஸ்ரீபெரும்புதூர் பனங்காட்டுக்குள் பழி தீர்க்கப்பட்டார் ராஜீவ். அந்த வழக்கில் 41 பேர் மீது குற்றச்சாட்டுகள் பதிவாகின. புலிகளின் தலைவர் பிரபாகரன், உளவுப் பிரிவுத் தலைவர் பொட்டு, பெண்கள் படைத் தலைவர் அகிலா ஆகிய மூவரும் பிடிக்க முடியாத குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டார்கள்.

மனித வெடிகுண்டாக வந்த தணு, பெங்களூரில் தற்கொலை செய்துகொண்ட சிவராசன் மற்றும் சுபா, மர்மமான முறையில் தூக்கில் தொங்கிய கோடியக்கரை சண்முகம் உள்ளிட்ட 12 பேர் மரணம் அடைந்தனர்.

மீதம் உள்ள 26 பேர் மீது வழக்கு விசாரணை பூந்தமல்லி தனி நீதிமன்றத்தில் நடந்தது. 1998 ஜனவரி 28-ம் நாள் அனைவருக்கும் தூக்குத் தண்டனை விதிப்பதாக நீதிபதி நவநீதன் தீர்ப்பு அளித்தார்.

மரண தண்டனை ஒழிப்பு இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன், உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய நால்வருக்கு மட்டும் மரண தண்டனை உறுதிப்படுத்தப்பட்டது.

ரவிச்சந்திரன், ஜெயகுமார், ராபர்ட் பயஸ் ஆகிய மூவருக் கும் ஆயுள் தண்டனையாகக் குறைக்கப் பட்டது. ஆயுள் தண்டனை என்றால், இதுவரை நடந்த குற்றங்களுக்கு எல்லாம் 14 ஆண்டுகளில் விடுதலை செய்ய… இந்த வழக்கில் கைதானவர்கள் மட்டும் 20 ஆண்டுகளாகச் சிறையில் இருக்கிறார்கள்.

‘ஆயுள் தண்டனை என்றால், ஆயுள் முழுக்க உள்ளேயே இருக்க வேண்டும்’ என்று வியாக்யானம் சொல்லப்படுகிறது. இதே தமிழ்நாட்டில்தான்
ஏழு ஆண்டு களுக்குள் வெளியே வந்த ஆயுள் தண்ட னைக் கைதிகளும் உண்டு.

சட்டத்தின் முன் அனைவரும் சமம் – என்பதுதான் எல்லாச் சட்டத்துக்கும் முதல் விதி… மீறப்படும் முதல் விதியும் இதுதான்.

செத்துப்போனது ராஜீவ் காந்தியா, ராஜா ராமா என்று சட்டம் பார்க்கக் கூடாது. 26 பேருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப் பட்டதை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி கள், ‘இது பயங்கரவாத வழக்கு அல்ல. எனவே, தடா சட்டம் இந்த வழக்குக்குப் பொருந்தாது’ என்று சொல்லிவிட்டார்கள்.

”இந்திய அரசைத் திகைக்கச்செய்வதோ, இந்திய மக்களுக்கு அச்சம் உண்டாக்குவதோ சதிகாரர்களின் நோக்கமாக இருந்தது என்பதை மெய்ப்பிக்க போதிய ஆதாரம் இல்லை.

தடா சட்டத்தின் பிரிவுகளுக்கான குற்றங்களுக்கு எங்களுக்கு முட்டுக் கொடுக்க முடியவில்லை” என்று நீதிபதிகள் சொன்னார்கள்.

பழ.நெடுமாறன், மேல் முறையீடு செய்யாமல் போயிருந்தால், இன்று 26 பேரும் தூக்கு மேடையில் நின்றிருப்பார்கள்.

மூத்த வழக்கறிஞர் என்.நடராஜனின் வாதத் திறமையால், 22 பேருடைய உயிர்கள் தப்பின. இப்போது நான்கு உயிர்கள் துடிக்கின்றன!

பேரறிவாளனின் மரண தண்டனை ரத்து செய்யப்பட வேண்டும் என்று இங்கு இருப்பவர்களுக்கு இணையாகக் குரல் கொடுப்பவர் உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி வி.ஆர் கிருஷ்ணய்யர்.

இவர் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர் அல்ல. நல்லவேளை, தமிழரும் அல்ல. இந்திய நீதிமன்றங்களும் நீதிபதிகளும் ‘வாழும் நீதி தேவதை’யாக எவரை நினைக்கிறார்களோ, அவரே சொல்கிறார்…

”இந்தியன் என்ற முறையில், உலகக் குடிமகன் என்ற முறையில், நீதிபதி என்ற முறையில் மரண தண்டனையை ஒழிக்கப் போராடுகின்றவன் என்ற முறையில், இதுவே என் நெடுநாளைய விருப்பம்.

நான் ஒரு கொள்கை வெறியன். உயிருக்கு ஆதரவும் சாவுக்கு எதிர்ப் பும் காட்டுகிற கொள்கை வெறியன். தூக்குத் தண்டனையைத் தூக்கில் இடுங்கள். இதுவே என் உறுதியான நிலைப்பாடு!” என்றார் வி.ஆர்.கிருஷ்ணய்யர்.


சட்டங்கள் மனிதனைத் திருத்துவதாக அமைய வேண்டும் என்ற அவர், தன்னு டைய எண்ணத்துக்கு ‘வால்மீகி நடவ டிக்கை’ என்றும் பெயரிட்டார்.


”ஒரு காலத்தில் கொள்ளைக்காரனாக இருந்த வால்மீகி, உலகின் மாபெரும் இதிகாசப் புலவர் ஆக முடியும் என்றால், எந்தக் குற்றத்துக்காகவும் ஒரு மனிதனின் உயிரை ஏன் பறித்துத் தண்டனை தர வேண்டும்?” என்று வி.ஆர்.கிருஷ்ணய்யர் கேட்டார்.

மேலும், தூக்கு மேடையில் நின்றுகொண்டு இருக்கும் பேரறிவாளன் செய்ததாகச் சொல்லப்படும் குற்றம், சந்தேகத்துக்கு இடமற்ற முறையில்மெய்ப் பிக்கப்படவும் இல்லை.

‘சிவராசன், சுபா, தணு ஆகிய மூவருக்கு மட்டுமே சதித் திட்டம் தெரியும்’ என்ற தனியார் ரேடியோ ஸ்டேஷன் உரையாடலை (எக்ஸ்.பி.392) சி.பி.ஐ. தனது ஆதாரங்களில் ஒன்றாகக் காட்டி, அதையே நீதிபதிகளும் ஏற்றுக்கொண்டார்கள்.

அது உண்மையானால், இன்றைக்கு தூக்கு மேடையில் நிறுத்தப்படும் நான்கு பேரும், ஆயுள் தண்டனை அனுபவிக்கும் நான்கு பேரும் சதி தெரியாமலேயே அந்தச் சுழலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டவர்கள் என்றுதானே சொல்ல முடியும்?

பேரறிவாளனின் விடுதலைக்குப் போராடுபவர்கள் இதையே தங்கள் தரப்பு வாதமாக வைக்கிறார்கள்.


1999-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அன்றைய குடியரசுத் தலைவர் கே.ஆர்.நாராயணனுக்கு சோனியா எழுதிய கடிதத்தில்,

‘என் அன்புக் கணவரின் கொடூரமான கொலைக்குக் காரணமாக இருந்த நான்கு

பேரும் தூக்குத் தண்டனை அடைந்தே தீர வேண்டும் என்று, எங்கள் குடும்பம்

நினைக்கவில்லை. எனக்கோ, என் மகனுக்கோ, என் மகளுக்கோ,

கொலையாளிகள் நான்கு பேரையும் தூக்கில் போடுவதில் விருப்பம் இல்லை.

கொலையாளிகள் தங்களுக்குக் கருணை மனு அனுப்பும்போது, தாங்கள்

அவர்களை மன்னித்து தூக்குத் தண்டனையை நிறுத்தும் படி பணிவுடன்
கேட்டுக்கொள்கிறேன்’ என்று கூறி இருந்தார்.

‘இதே நிலைப்பாட்டில்தான் நான் இன்றும் இருக்கிறேன்’ என்பதை சோனியா

உறுதிப்படுத்துவதில்தான் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரின்

உயிர்களும் அடங்கியிருக்கிறது.

120-க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் எனும் உலகச் சட்டம் ‘கொல்லாமை’பற்றி நிறையவே சொல்கிறது.
வள்ளுவர், காந்தி, வி.ஆர்.கிருஷ்ணய்யர் மூவரில் யார் பேச்சைக் கேட்டாலும் மூவர் தலை தப்பும். தப்புமா?

- ஆனந்த விகடன் -
Download As PDF

மர்மங்கள்..

                                                  


                                                     மர்மங்கள்.....
 
     இந்தியாவில் நடைபெற்று வரும் நிகழ்வுகள் தமிழீழத்துக்கு எதிரானதா? என்ற கேள்வியுடன் வந்த கட்டுரை ஒன்று மிகுந்த பரபரப்புடன் பேசப்படுகிறது. அதன் முழுவடிவம்:

    
   இந்தியாவின் மர்மமான நிகழ்வுகளில் தமிழீழத்தின் விடியலுக்கு எதிரானசதிகளா அல்லது சிங்களனுக்கு எதிரான தொடக்கமா…..
கடந்த சில நாட்களாக இங்கு இந்தியாவில் நடைபெற்றுவரும் நிகழ்வுகளை உற்று
நோக்கும் போது,சில மர்மங்கள் நெருடலை ஏற்படுத்துகிறது

1 )இந்தியாவில் மிக முக்கிய அரசியல் பிரச்சனை நடக்கும்போது அறுவை
சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ளாராம் சோனியா.இத்தனைக்கும்
உலகத்தரத்தில் இந்தியாவில்
மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக அமெரிக்காவில் இருப்பவர்கள் இந்தியாவுக்கு
வருகிறார்கள் .

2 ) நாடே உற்றுநோக்கிக்கொண்டிருக்கும் அண்ணா ஹசாரே உண்ணாவிரதத்தை பற்றி
ஒரு அறிக்கை கூட வெளிடாத மர்மம்.

3 ) இந்தியாவின் நாடாளுமன்றத்தில் கடந்த 16 ஆம் தேதி நடைபெறவிருந்த
சிறிலங்காவின் போர்க்குற்றங்களின் மீதான விவாதமானது,சிறிலங்காவில்
போருக்குப்பின்னால் இந்தியா செய்த உதவிகள் தொடர்பாக என்று
மாற்றப்பட்டதும் ஒரு மர்மம்.

4 ) சோனியா அறுவை சிகிச்சைக்கு என்று அமேரிக்கா சென்றவுடன் இங்கிலாந்து
நாடு ஐரோப்பிய நீதிமன்றத்தில் விடுதலைப்புலிகளின் தடை நீக்கத்திற்கான
வழக்கில் புலிகளுக்கு எதிராக ஆஜராகியதுஒரு மர்மம்,

திறந்த இருதய அறுவை
சிகிச்சைக்கு கூட பத்துநாட்களில் வெளியே வரும் இந்த காலத்தில் ஒருமாத
காலம் தொட்டு அமெரிக்காவில் சிகிச்சை…நம்மை மடையர்களாக
ஆக்குகிறார்களோ என்ற மர்மம் எழுகிறது,ஏனென்றால் கடந்த பதினோரு ஆண்டுகளாக
கண்டுகொள்ளப்படாத பேரறிவாளன், சாந்தன்,முருகனின் கருணை மனு சோனியாஅமெரிக்கா சென்ற சமயத்தில் தானா நிராகரிக்கப்பட வேண்டும்,

…இங்கே
மூவருக்கு கருணைமனு
நிராகரிக்கப்படுகிறது அமெரிக்காவின் விமானங்கள் சிறிலங்காவின் வான்
பரப்பில் ஒத்திகைக்கு வருகிறது.

மர்மத்தின் உச்சக்கட்டமாக இந்தியாவின்
வெளியுறவுத்துறை ஆலோசகர் எம்கே நாராயணன் நேற்று தமிழீழ தமிழர்களின்
பிரச்சனையில் சிங்களனுக்கு ஆலோசனையும் சிங்கள அரசு தமிழர்களுக்கு எதுவும்
செய்யவிரும்பாது என்ற உண்மையையும் சொல்கிறார். இது மிகப்பெரிய மர்மம்…

5 ) உலகத்தின் மிக பெரிய மூன்றாவது கடற்படையும்,கடலோர படை என்ற
ஒன்றும் வலிமையாக இருந்தும் வேதாரண்யத்தில் இருந்து வேம்பார்வரைக்குமான
200 கிலோமீட்டர் கடல் எல்லைக்கு 100 படகுகளில் வெறும் 200 ஆளணிகளை கொண்டு
பாதுகாப்பு அளிக்காத மர்மம் என்ன என்றும் தெரியவில்லை.

6 ) செப்டம்பர் மாதம் கூடுகின்ற மனித உரிமைகள் ஆணையத்தில் இந்தியா என்ன
மாதிரி செயல்படபோகிறது என்ற மர்மமும் இருக்கிறது,

ஆனால் ஒன்றுமட்டும்
புரிகிறது இத்தனை மர்மத்திற்கும் ஒரு மெல்லிய தொடர்பு இருக்கிறது,

அது
இந்தியாவுக்கு இன்னும் மனசாட்சி உறுத்தவில்லை இந்தியாவின் தேசியத்தை
காங்கிரசுக்காரன் அழித்துக் கொண்டு இருக்கிறான் என்பதை இன்னும் இங்கே
யாரும் புரிந்துகொள்ளவில்லை,

இந்தியாவின் தமிழர் விரோத செயல்ப்பாடுகளில்
தேக்கநிலையினை பாதிக்கப்பட்ட,மற்றும் புலம்பெயர் தமிழீழமக்கள் சிறப்பாக
செய்துவிட்டார்கள்.

எதிர்வரும் செப்டம்பர் அமர்வில் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தில்
அமெரிக்காவும் ஜெர்மனியும் சிறிலங்காவின் போற்குற்றங்களுக்கு எதிரான
சர்வதேச நடவடிக்கைக்கு அழுத்தம் கொடுத்து தீர்மானம் கொண்டுவரும் என்ற
எதிர்பார்ப்பு நிலவி வரும் நேரத்தில்,ராஜபக்சே சீனா செல்கிறான்,

சோனியா
அமெரிக்காவில் சிகிச்சை என்ற பெயரில்
சதிவலை பின்னுகிறார்,சதிவலைக்கு வலு சேர்க்க,சாந்தன்,பேரறிவாளன்,முருகன்
மீதான கருணை மனு நிராகரிப்பு,செய்தியாகிறது ,

சர்வதேசம் மீண்டும் ஒருமுறைராஜீவை உச்சரிக்கிறது,எப்போதும் போல தமிழ்நாட்டு சட்டப்பேரவையின்
தீர்மானம் கழிவரைக்காகிதமாகிப்போனாலும், தீர்மானம் நிறைவேற்றியவுடன்
சென்னை
வந்து முதலமைச்சர் ஜெயலிதாவை பார்த்துவிட்டு கொழும்பு சென்ற சிவசங்கரமேணனும் கொழும்பு சென்றுவிட்டு வந்தது தொடர்பாக எந்த ஒரு
விஷயத்தையும் வெளியில் சொல்லவில்லை

.கொலைகாரன் ராஜபக்சேவை மூக்கறுத்து
திருப்பி அனுப்ப முழு ஒத்துழைப்பு அளித்த இங்கிலாந்து நாடு,

இன்று
விடுதலைப் புலிகளின் தடை நீக்கத்திற்கு எதிராக களம்
இறங்குகிறது.

இத்தனைக்கும் உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் தெரியும்

புலிகளையும் தமிழீழத்து மக்களையும் பிரிக்க முடியாது என்பது

நன்றாக தெரிந்திருந்தும் இங்கிலாந்து தமிழனுக்கு எதிராக களம் இறங்குகிறது.

      சோனியா அமெரிக்காவில்,இப்போது அமெரிக்கா வான்படை சிறிலங்காவில் ஒத்திகை
பயிற்ச்சியாம்.

இப்போது எம்.கே.நாராயணனுக்கு அரசியல் விவகாரம் பற்றி
பேசவேண்டிய
தேவை வருகிறதாம்…

.ம்... உச்சந்தலையில்  அடித்தாலும்
சரி,சிங்களனுக்கு சேவகம் செய்வதை இந்தியா நிறுத்தாது,

இப்போதும்
இந்தியாவின் செயல்கள் எந்த விதத்திலாவது சிங்களனுக்கு சேவகம் செய்ய
வேண்டும் என்ற துடிப்பு மட்டும் அடங்காமல் இருக்கிறது.

இந்தியாவில் காங்கிரசு என்ற ஒரு கட்சி இருக்கும் வரைக்கும் இந்தியா
திருந்தப்போவதும் இல்லை,அதன் இறையாண்மை நீடிக்கப்போவதும் இல்லை, இங்கே
நாட்டை பற்றி யாரும் கவலை கொள்வதும் இல்லை,

உலகத்திலேயே,ஊழலுக்கு எதிராக
சட்டம் இயற்றவேண்டி உண்ணாவிரதம் இருந்து போராடும் இழி நிலையில், ஆட்சி
நடத்தும் ஒரு கட்சியிடம் நீதியையும் நியாயத்தையும் எதிர்பார்க்க
முடியுமா?…

போராடுகிற ஒரு இனம் அதன் சுதந்திரத்தை அடைந்தே தீரும் ….
போராடுவோம்....
கிடைக்கின்ற தளங்கள் அனைத்தில் இருந்தும் அயராது போராடுவோம்.

நன்றி öருநடன்

Download As PDF

வியாழன், 25 ஆகஸ்ட், 2011

பேரறிவாளன், சாந்தன், முருகனுக்கு செப்7 ல் தூக்கு.

                                                            

                      பேரறிவாளன், சாந்தன், முருகனுக்கு செப்7 ல் தூக்கு.
                                     மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம்.

 ராஜிவ் மரணத்தில் தொர்டபுடையவர்கள் என குற்றம் சாட்டப்பட்டு கடந்த 21 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரை செப்டம்பர் 7ம் தேதி தூக்கிலிட உள்துறை அமைச்சகம் தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.

 முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தியின் கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோர் கடந்த 21 ஆண்டுகளாக சிறையில் <உள்ளனர். தூக்கு தண்டணை விதிக்கப்பட்ட இவர்கள் தங்கள்
மீது கருணைகாட்டக்கோரி குடியரசு தலைவருக்கு கருணை மனு அனுப்பினர். அந்தக்கருணை மனு ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வேலூர் சிறை அதிகாரிக்கு கடிதம் அனுப்பியுள்ளது.
அந்தக்கடிதத்தில் வருகிற செப்டம் மாதம் (அடுத்தமாதம் )7 ம்தேதிக்குள் மூவரையும் தூக்கிலிடவேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
Download As PDF

தெருமுனை பிரச்சாரம்

               தெருமுனை பிரச்சாரம்                 
                                                        
 சிவகிரியில்  ராஜிவ்காந்தி, மூப்பனார், மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் ஆகியோரது பிறந்தநாளை முன்னிட்டு

 தெருமுனை பிரச்சாரம் மற்றும் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.

கூட்டத்துக்கு  கொடுமுடி வட்டார காங்கிரஸ் கமிட்டி துணைத்தலைவர்  எஸ்.ஆர்.தேவராஜா, தலைமை வகித்தார்.

பாரத்பாபு,  வி.எஸ்.ஜெ வெங்கடாசலம், கணேஷ்ராம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.தென்னிந்திய நேகாப் தலைவர் மற்றும் ஆலோசகர் மக்கள் ராஜன் பேசினார்.
    
Download As PDF

குற்றம் சாட்டப்பட்டவருக்கும் நீதிபதிக்கும் தொடர்பு?!.

                                                                         
                       குற்றம் சாட்டப்பட்டவருக்கும் நீதிபதிக்கும் தொடர்பு?!...

            வழக்கு விசாரணைக்கு தடை: சென்னை உயர்நீதி மன்றம் அதிரடி.

                           

  காஞ்சி சங்கரராமன் கொலை செய்யப்பட்ட வழக்கில்  கைது செய்யப்பட்ட

காஞ்சி ஜெயந்திர சரஸ்வதி சுவாமியின்வழக்கு விசாரணை புதுச்சேரி செஷன்ஸ்கோர்ட்டில்நடந்து வந்தது.

  இதன்  இறுதிவிசாரணை அடுத்த மாதம் 5 ம்தேதி நடபெறுவதாக இருந்தது.

 விசாரணை நீதி மன்றத்தின் நீதிபதியுடன் ஜெயந்திரேர்  பேசியுள்ளார். என்று கூறி சென்னையைச்சேர்ந்த வழக்குரைஞர் சுந்தரராஜன் செஷன்ஸ் கோர்ட்டின் விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில்  தடை 
வழக்குரைஞர் சுந்தரராஜன்  மனு   தாக்கல் செய்தார்.    

 “ சங்கரராமன் கொலை வழக்கை விசாரித்து வரும் நீதிபதியுடன் குற்றம் சாட்டப்பட்ட ஜெயந்திரர் மற்றும்

அவரது  உதவியாளர் கௌரி மற்றும் இருவர் பேசியுள்ளனர். இவர்களது பேச்சை ஒரு தமிழ் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.

அதில் ஜெயந்திரர்  இன்னும் ஒரு வாரம் பத்துநாட்களில் மீதம் உள்ளவற்றையும் கொடுத்துவிடுகிறேன்.

அதுவரை பொறுமையாக இருங்கள் என கூறுகிறார்.

இதன் மூலம் குற்றம் சாட்டப்பட்ட ஜெயந்திரருக்கும் நீதிபதிக்கும் ஏதோ ஒரு உடன் பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

 எனவே சங்கரராமன் கொலை வழக்குக்கு   தடை விதிக்கவேண்டும் என        மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இதனை ஏற்ற சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி சுகுணா , செஷன்ஸ் கோர்ட் வழக்குக்கு

 இடைக்கால தடை வழங்கியதுடன்  இது குறித்து விசாரணையை 8 வாரகாலத்துக்குள் மேற்கொண்டு   அறிக்கையை தாக்கல் செய்யுமாறு     சென்னை  உயர்நீதிமன்றத்தின் ஊழல் கண்காணிப்பு பதிவாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.


Download As PDF

சிறந்த நூறுகளை ஜெயலலிதா பெற வேண்டும் எம்.எல்.ஏ., சரத்குமார் பேச்சு.

                                                                 

                                    சிறந்த நூறுகளை ஜெயலலிதா பெற வேண்டும்
                                                       எம்.எல்.ஏ., சரத்குமார் பேச்சு.
  


  தமிழக   சட்டசபையில் ச.ம.க.தலைவர்  தென்காசி எம்.எல்.ஏ.,சரத்குமார் பேசியதாவது:

மழை பெய்யாவிட்டால் பூமியில் புல், பூண்டு கூட முளைக்காது என்பது வள்ளுவன் சொல். அதேபோல ஒரு நாட்டில் நல்லாட்சி என்ற மழை பெய்யாவிட்டால் நாட்டின் வளர்ச்சி பாதிக்கப்படும்.

தமிழகத்தில் மூன்று மாதங்களுக்கு முன் 203 இடங்களில் கனமழை பெய்ததால் சிறப்பான ஆட்சி அமைந்து வறண்டு போயிருந்த, இருண்டு போயிருந்த தமிழகம் முதல்வர் ஜெயலலிதாவால் மீட்கப்பட்டுவிட்டது என்றே சொல்லலாம்.

தமிழகத்தில் 234 இடங்களிலும் மழை கொட்டோ கொட்டென்று கொட்டும் என்று மதுரை வானிலை அறிக்கை சொன்னது பொய்யாகி, மக்கள் வானிலை அறிக்கை இன்று உண்மையாகி விட்டது.

இன்று மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரின் நல்லாட்சி 100 நாட்களை எட்டி விட்டது. எந்த துறையிலும் 100க்கு 100 வாங்க வேண்டும் என்பதுதான் அனைவருடைய ஆசையாக இருக்கும்.

முதல்வர் இதுபோன்ற சிறந்த நூறுகளை பலமுறை பார்த்தவர். தற்போது மூன்றாவது முறையாக பார்க்கின்ற 100வது நாள். மூன்றாவது முறையாக முதல்வருக்கு தமிழக மக்கள் அளித்த பெரும் வெற்றியை இந்தியா மட்டுமல்ல உலகமே பாராட்டுகிறது.

பல முக்கிய தலைவர்கள், இந்தியாவின் முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பலர் முதல்வர் பதவியேற்ற நாளில் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்தனர்.

முதல்வரோடு 33 அமைச்சர்களும் பதவி ஏற்றனர். முதல்வர் பதவியேற்றவுடன் முதல் கையெழுத்திலேயே ஏழு சிறப்பு வாய்ந்த சலுகைகளை அறிவித்து இந்திய அரசியலில் மாபெரும் சாதனைகளை படைத்துள்ளார்.

பொது வினியோக திட்டத்தில் 1 கோடியே 83 லட்சம் குடும்பங்களுக்கு இலவச அரிசி. சுமார் 24 லட்சம் முதியோர்களுக்கு, ஆதரவற்றோருக்கு மாதாந்திர ஓய்வூதியம் ஆயிரம் ரூபாயாக உயர்வு. ஏழை பெண்களின் திருமணத்திற்காக 25 ஆயிரம் ரூபாயுடன் 4 கிராம் தங்கம். பட்டம் பெற்ற பெண்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் நிதியுதவி. மீன்பிடி தடை காலத்தில் மீனவர்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவி தொகை 2 ஆயிரம் ரூபாயாக உயர்வு போன்றவை அற்றில் முக்கியமானவை.

தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் உரிய காலத்தில் நிறைவேற்ற தமிழக வரலாற்றிலேயே முதன் முறையாக அரசு சிறப்பு திட்ட செயலாக்க துறையையும், அதற்கான அமைச்சரையும் நியமித்துள்ளது. நிலமற்ற ஏழைகளுக்கு இரண்டு ஏக்கர் நிலம் அளிப்பதாக வாக்குறுதி கொடுத்தவர்கள் ஆட்சிக்கு வந்தவுடன் பலருடைய நிலத்தை அபகரித்தனர்.

நிலத்தை இழந்தவர்கள் துடிதுடித்தார்கள், துவண்டார்கள். வன்முறை கும்பலுக்கு பயந்து வெளியே சொல்ல முடியாமல் தவித்தார்கள்.

மகாபாரதத்தில் பாஞ்சாலியை துச்சாதனன் துகில் உரித்த போது அவளது மானங்காக்க பகவான் ஸ்ரீகிருஷ்ணர் வந்தது போல வீடு, மனையை இழந்தவர்களுக்கு அவற்றை மீட்டு தர முதல்வர் போலீசாருக்கு ஆணையிட்டிருப்பது வரவேற்கத்தக்கது.

காவிரி வடிநில பகுதி விவசாயிகள் சாகுபடியை உரிய நேரத்தில் மேற்கொள்வதற்காக உரிய நாளுக்கு முன்னதாகவே மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்கு நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இரண்டாம் பசுமை புரட்சிக்கு வித்திடப்பட்டுள்ளது.

கூட்டுறவு துறை வாயிலாக உரிய காலத்தில் கடனை திரும்ப செலுத்துவோருக்கு வட்டியில்லா பயிர் கடனாக 3 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கப்பட இருக்கிறது. இரண்டாம் வெண்மை புரட்சி உருவாக்க வறுமையில் வாடும் குடும்பங்களுக்கு 60 ஆயிரம் கறவை மாடுகள் வழங்கப்பட இருக்கிறது.

விவசாய கூலி தொழிலாளர்களின் ஒரு லட்சம் குடும்பங்களுக்கு தலா 12 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஆடுகள் கொடுக்கப்பட இருக்கிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.

தொழில் வளம் பெருக்கப்படுகிறது. மக்களின் வீட்டிற்கே சென்று சுகாதார வசதியளிப்பதற்கு நடமாடும் மருத்துவமனை திட்டம் வரவேற்கத்தக்கது.

தொப்புள் கொடி உறவான ஈழ தமிழர்கள் வாழும் முகாம்களில் குடும்ப தலைவருக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கப்படுகிறது.

திருப்பூர் சாய பட்டறை பிரச்னைக்கு தீர்வு காண சுமார் 200 கோடி ரூபாய் வட்டியில்லா கடனாகவும், 10 ஆயிரத்து 838 பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 18 கோடியே 38 லட்சம் ரூபாய் இழப்பீடாகவும் வழங்க முதல்வர் ஆணையிட்டுள்ளார். இப்படி பல சாதனைகளை செய்து இந்த 100 நாட்களில் அனைத்து தரப்பு மக்களையும் மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளார் முதல்வர்.

அண்ணா சாலையில் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடத்தில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி போன்று சிறந்த ஆஸ்பத்திரியும், மருத்துவ கல்லூரியும் உருவாக்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். இது ஏழை, எளிய மக்கள் சிறப்பான மருத்துவம் பெற வேண்டும் என்ற முதல்வரின் உண்ணத நோக்கத்தை எடுத்து காட்டுகிறது.

ஈழத்தில் நமது சொந்தங்கள் அழிக்கப்பட்டதை உலக அரங்கிற்கு எடுத்து சொல்லும் வகையில் இலங்கை அரசு மீது பொருளாதார தடை மற்றும் ராஜபக்சே போர் குற்றவாளியாக அறிவிக்கப்பட வேண்டும் என்ற தீர்மானம், கச்சத்தீவை மீட்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றியிருப்பது மாபெரும் சாதனையாகும்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் மைனாரிட்டி அரசு இழைத்த கொடுமைகளால் வேதனையுடனும், சோதனையுடனும் வெளியில் சொல்ல முடியாமல் தவித்த தமிழக மக்களுக்கு இருள் சூழ்ந்த தமிழகத்திற்கு மக்கள் மன்றம் அளித்த ஆட்சி என்னும் ஒளி விளக்கை ஏந்தி தமிழக மக்களின் இன்னல்களை களைய வந்த முதல்வரை நான் பார்க்கிறேன்.

சித்திரை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக மீண்டும் அறிவித்து சட்டசபையில் சட்டத்தை தாக்கல் செய்து மன்ற ஒப்புதல் பெற்றது பாராட்டத்தக்கது.

பரிவு, பாசம், வீரம், விவேகம், அறிவு, ஆற்றல், திறமை கொண்ட முதல்வர் தலைமையில் இன்று 100 நாளை எட்டி இருக்கின்றோம். பல 100 ஆண்டுகள் இந்த சாதனைகள் தொடரும்” என எம்.எல்.ஏ.,சரத்குமார் பேசினார்.
Download As PDF

தமிழனை புறக்கணிக்கும் மீடியாக்கள்

                                                  

                                                  தமிழனை புறக்கணிக்கும்  மீடியாக்கள்
 
                                      இலங்கை பிரச்சனை விவாதத்தை ஒலிபரப்பவில்லை...

லோக்சபாவில் இன்று இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்த விவாதத்தில்  டி.ஆர்.பாலு  பேசினார்.

  போஸ்னியாவில் இனவெறிப் படுகொலைகளை நடத்திய அந்த நாட்டு ராணுவத் தளபதியை சர்வதேச கோர்ட் தண்டித்துள்ளது. அப்படி இருக்கையில்
அதேபோன்ற தண்டனையை  ராஜபக்சேவுக்கு ஏன்  தர முடியாது.

ஈழத்தில் நடந்த இறுதிக் கட்ட போரின்போது ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ
உதவிகளைக் கூட இலங்கை அரசு தரவில்லை. முகாம்களில் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் அடைக்கப்பட்டனர். இன்னும் கூட அவர்களுக்கு விடிவு

பிறக்கவில்லை. இதை ஐ.நா. நிபுணர் குழு அறிக்கையே சொல்கிறது.

முகாம்களில் அடைக்கப்பட்ட தமிழர்கள் சொல்லொணா துயரத்திற்கும், சித்திரவதைக்கும் உள்ளானார்கள். பலர் படுகொலை செய்யப்பட்டனர். பெண்கள்
கற்பழிப்புக்குள்ளானார்கள்.

இலங்கையில் தமிழர்களைப் படுகொலை செய்த கொலைகாரன் ராஜபக்சேவுக்கு சர்வதேச கோர்ட்டில் கடும் தண்டனை வாங்கித் தர வேண்டும். தமிழர்கள்
பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண இலங்கையை இந்தியா கடுமையாக கேட்டு் கொள்ள வேண்டும்.

விவாதத்தை  புறக்கணித்த  மீடியாக்கள்:

நாடாளுமன்றத்தில் இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்த விவாதத்தை எடுத்தே ஆக வேண்டும் என்று அதிமுக, திமுக, இடதுசாரிகள் ராஜ்யசபாவில்  நேற்றுகடும் அமளியில்இறங்கினர்.

இதனால் அவை  ஒருமுறை  ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் இன்றைக்கு விவாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.  இன்று
ராஜ்யசபாவிலும், லோக்சபாவிலும் விவாதம் நடந்தது.

டெல்லித்தெருக்களில் குரங்குகள் நடத்தும் குடும்பத்தை மணிக்கணக்கில் ஒலிப்பரப்பும் ஆங்கில மீடியாக்கள்

வாழ்க்கையை தொலைத்துவிட்டு.....வதை முகாம்களுக்குள் சிக்கி...உயிரை விட்டுக்கொண்டிருக்கும்
அப்பாவித்தமிழர்களுக்காக  இந்தியாவின் ராஜ்ய சபாவிலும், லோக்சபாவிலும் நடந்த விவாதித்தின் ஒரு சிறு பகுதியைக்கூட ஒலிபரப்ப முன்வரவில்லை. 

இலங்கை தமிழர்களுக்காக நடந்த  இந்த விவாதத்தை எந்த ஒரு சேனலும் ஒலிபரப்பமுன்வராதது   தமிழர்கள்மீது   கொண்டிருக்கும் மனப்போக்கை காட்டுவதாய் உள்ளது.
                      



                                                                           
 

Download As PDF

அன்னாஹசாரே உண்ணாவிரதத்தில் விஜய்..

                        
                                                                        

                              அன்னாஹசாரே உண்ணாவிரதத்தில் விஜய்...

   தமிழ் திரைப்பட நடிகர் விஜய் டெல்லியில் சமூக சேவகர் அன்னாஹசாரே நடத்திவரும்

    உண்ணாவிரதப்போராட்டகளத்துக்கு சென்று அன்னாஹசாரேக்கு ஆதரவு தெரிவித்தார்.
   
உண்ணாவிரதத்தில் தனது இரசிகர்களுடன் கலந்துகொண்ட அவர் கூறியதாவது:




                                                             

காந்திய வழியை உலக நாடுகள் பின்பற்றுகின்றன. அந்த விதத்தில் காந்திய வழியில்

உண்ணாவிரதம் இருக்கிறார் அன்னாஹசாரே.

 நாட்டின் வளர்ச்சிக்கு   ஊழல் பெரிய தடையாக உள்ளது.

ஊழல், மற்றும் லஞ்சம் ஒழிந்தால் வல்லரசாக இந்தியா மாறும். அதற்காக அன்னாஹசாரே  போராடுகிறார்.

இது நல்ல போராட்டம். மக்கள் நலனுக்காக நடத்தப்படும் இந்தப்போராட்டத்தில்

 பங்கேற்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
Download As PDF

சிம்மசொப்பனம்..

                                                          சிம்மசொப்பனம்..                                                                   

இரண்டாம் உலக மகா யுத்தத்தில் அமெரிக்க, பிரான்ஸ், இங்கிலாந்து நேச நாட்டு படையணியின் ஹீரோயினாக போற்றப்படும்
ஆஸ்திரேலியாவின் இரகசிய ஏஜெண்ட் நான்சி வேக் (Nancy Wake) 98 வது வயதில் கடந்த சனிக்கிழமை காலமானார். அவருடைய பிரிவு, பிரான்ஸ், அமெரிக்க, இங்கிலாந்து மக்களிடையே வர்ணிக்க முடியாத சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஏனெனில் அவர்களுக்கு தான் நான்சி ஹீரோயின். ஹிட்லருக்கு, அவர் கண்டுபிடித்தே தீரவேண்டிய ஒரு 'வெள்ளை எலி'.

நியூசிலாந்தில் பிறந்தது ஆஸ்திரேலியாவில் வளர்ந்து, ஐரோப்பாவுக்கு இடம்பெயர்ந்த நான்சி வேக் உண்மையில் ஒரு ஊடகவியலாளர்.  Henri  Edmond Ficca எனும் பிரெஞ்சு காரரை திருமணம் செய்து கொண்ட்தன் மூலம், பிரான்ஸ் குடியுரிமை பெற்றுக்கொண்ட நான்சி மார்செயிலில் வசித்து வந்த போது,  நாசிப்படை பிரான்ஸ் மீது படையெடுத்தது. 1940 ம் ஆண்டு பிரான்ஸ், ஜேர்மன் படைகளிடம் வீழ்ந்த பின், தப்பியோடிய கேப்டன் லான் கரோவின் நெட்வேர்க்கில் நான்சியும் இணைந்து கொண்டார்.
அங்கிருந்து பிரெஞ்சு படை வீரர்களுக்கான தபால் பரிமாற்ற வேலை செய்து வந்ததுடன், நாசி படைகளில் உளவு பார்த்தல்,  நாசவேலை செய்தன் என்பவற்றில் ஈடுபட்டார். ஜேர்மனிய படையினரின் எங்கு ரெய்டு நடவடிக்கைகள் மேற்கொள்கிறார்கள் என்பதை முன்கூட்டியே தெரிந்து  கொண்டு மாற்று வழி மூலம் நூற்றுக்கணக்கான பிரெஞ்சு படைவீரரை தப்பிக்க வைத்தார். ஜேர்மனிய ஆயுத பரிமாற்றல் போக்குவரத்தையும் நாசவேலை மூலம்  குழப்பினார்.

நான்சியின் தொலைபேசி உரையாடல்கள் சிலவற்றை ஒட்டுக்கேட்டதன் மூலமும்,  தகவல் பரிமாற்ற கடிதங்களை கைப்பற்றியதன் மூலமும், அவர் நேசப்படையணியின் ஒற்றராக செயற்படுவதாக உறுதி செய்து கொண்டது ஜேர்மன் படை.

இதையடுத்து ஹிட்லரின் புலனாய்வு படையான Gestapo வினால் 'வெள்ளை எலி' என தேடப்பட்டார்.  அவருடைய தலைக்கு 5 மில்லியன் பிராங்குகள் பரிசுத்தொகை அறிவித்தது Gestapo.

நான்சியின் கணவர் ஹென்ரி, கெஸ்டாபோவினால் பிடிபட்டார். நான்சியின் இடத்தை சொல்லும் படி அடித்து துன்புறுத்தி இறுதியில் அவரை சித்திரவதை செய்து படுகொலை செய்தனர்.  ஆனால்  நான்சி மறைந்திருக்கும் இடத்தை அவர் சொல்லவே இல்லை. ஆனால் நான்சி டொலூஸே எனும் இடத்தில் கைது செய்யப்பட்டார். சந்தர்ப்பவசத்தால் நான்கு  நாட்களில் விடுதலை செய்யப்பட்டார். தனது ஆறாவது முயற்சியில் பிரெனீஸ் மலைத்தொடரை கடந்து ஸ்பெய்னிற்குள் ஊடுருவினார்.

பின்னர் பிரிட்டனுக்கு  வந்து நேசநாடுகளின் சிறப்பு தாக்குதல் படையில் இணைந்தார். பின்னர் மீண்டும் பிரான்ஸுக்கு திரும்பினார். பரசூட் மூலம் அவொர்ய்ன் நகருக்குள் நுழைந்து, பிரான்ஸின் மேக்கி கொரில்லா படையின் கேப்டன் ஹென்ரி தார்டிவாட்டை சந்தித்தார். அங்கிருந்து நேசப்படையின் புகழ்பெற்ற நேர்மாண்டி படையெடுப்பு தாக்குதலில் பங்கேற்றார்.  மாண்ட்லுசோனில் உள்ள கெஸ்டாபோ தலைமையகம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் நடவடிக்கையிலும் பங்கேற்றார்.

நான்சி வழிநடத்திய 7000 மேக்கி கொரில்லா படையினர், ஹிட்லரின் 22,000 எஸ்.எஸ் படையினருடன் யுத்தம் புரிந்தனர். நான்சியின் தந்திரோபாய யுத்த நடவடிக்கைகளால், 1400 படையினரை வெறும் 100 பேர் கொண்டு அழிக்க முடிந்தது.  மேக்கி குழுவின் தலைவர் ஹெண்ட்ரி தார்விட், நான்சியின் சக்திவாய்ந்த யுத்த நெறிமுறையை கண்டு வியந்து போனார்.

ஒரு முறை எஸ்.எஸ். படையின் ரெய்டு நடவடிக்கை ஒன்றின் போது, நான்சி படையணியை கண்டுகொண்ட ஒரு படைவீரன் அலாரம் எழுப்பி எச்சரிக்கை செய்ய முயற்சித்தான். சட்டென அவன் மீது பாய்ந்த நான்சி சத்தமே இல்லாது அவனை கொன்றழித்தார். (1990ம் ஆண்டு தொலைக்காட்சி ஊடக பேட்டி ஒன்றின் போது எப்படி இதற்கு துணிவு வந்தது என அவரிடம் கேட்டனர். தன் கைகளை சட்டென கழுத்துக்கு கொண்டு வந்த அவர் இப்படித்தான் என செயல்முறை  ரீதியில் விளக்கம் அளித்தார்)

இன்னுமொரு முறை, படைநடவடிகையின் இரகசிய தகவல் கோர்டுக்கள் பரிமாறும் படைவீரர் ஒருவரை  ஜேர்மனி படைவீரர்கள் ரெய்டு நடவடிக்கை ஒன்றின் போது கொன்றுவிட்டனர்.  உரிய காலத்தில் அவை சென்றடைய வேண்டும் என்பதற்காக 800 கி.மீ தூரம் ஜேர்மனிய செக் பாயிண்டுக்களை கடந்து அத்தகவலை நேரிலேயே போய் தெரிவித்தார்.

1944ம் ஆண்டு நாசிப்படைகளிடமிருந்து பிரான்ஸ் முழுவதும் சுதந்திரமடைந்தது.
ஹிட்லரின் Gestapo புலனாய்வு பிரிவுக்கே சிம்ம சொப்பமனாக திகழ்ந்த நான்சியை பற்றி அதிகம் பேர் அறிந்திடாத விடயமொன்று
1933 ம் ஆண்டு வியென்னாவில் வைத்து அடோல்ஃப் ஹிட்லரை ஊடக  பேட்டி ஒன்று எடுத்தார் நான்சி. அப்போது தான் யூதர்களுக்கு எதிராக ஹிட்லர் எவ்வளவு குரோத மனப்பாங்கை கொண்டிருக்கிறார் என கண்டுகொண்டார். அவருடைய நாசிப்படைகளுக்கு எதிராக போராட வேண்டும் என்பது நான்சி அன்றெடுத்த சபதம் தான்!

மற்றும் படி அவருக்கும் யூதர்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை.

பின்னர் ஒரு தடவை அவர் கூறியது 'எனக்கு சொல்வதற்கு ஒன்று மட்டும் தான் இருக்கிறது. நான் பல ஜேர்மனியர்களை கொன்றொழித்தேன். ஆனால் மன்னித்துக்கொள்ளுங்கள். நான் இன்னும் அதிகமானவர்களை கொல்லவில்லை'
இரண்டாம் உலக யுத்தத்தில் நேசப்படைகளுக்காக போரிட்டு மிக உயரிய கௌரவம் பெற்றுக்கொண்ட ஒரு சிலரில் நான்சியும் ஒருவர். பிரான்ஸின் உயரிய விருதுகளில் ஒன்றான D'Honneur விருது, பிரிட்டனின் ஜோர்ட் மெடல், அமெரிக்காவின் சுதந்திரத்திற்கான விருதுகள் என்பன அவருக்கு கௌரவம் வழங்கி கொடுக்கப்பட்டன.
ஆனால் சமீபத்தில் தான் (1990 காலப்பகுதிக்கு பின்னரே) அவர் பிறந்து, வளர்ந்த நாடுகளான நியூசிலாந்து, ஆஸ்திரேலியா போன்றன அவரை கௌரவப்படுத்தி விருதுகள் வழங்க  முற்பட்டன.
யுத்தம் முடிவடைந்த பின்னர் ஆஸ்திரேலியாவின் பல பொது தேர்தல்களில் நான்சி போட்டியிட்ட போதும், துரதிஷ்டவசமாக தோல்வியை தழுவிக்கொண்டார்.
தனது இறுதிக்காலத்தில், இங்கிலாந்தில் வசித்தது வந்த அவர், லண்டனில் நேற்று முன் தினம் சனிக்கிழமை காலமானர். மத்திய பிரான்ஸில் தனது அஸ்தியை கலந்து விட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அவருடைய உண்மைச்சம்பவங்களை அடிப்படையாக கொண்டு, புகழ்பெற்ற நாவலாசிரியர் செபெஸ்டியன் ஃபோல்க்ஸ் உருவாக்கிய ஷார்லொட் கிரே நாவலும், அதே தலைப்பில் நடிகை கேட் பிளான்செட் நடித்து வெளியாகிய திரைப்படமும், சந்தர்ப்பம் கிடைத்தால் பாருங்கள். நான்ஸியை நேரடியாக உங்கள் மனதில் நிலை நிறுத்தி விடும் என்பதில் சந்தேகம் இல்லை.
                                                           நன்றி ஸாரா 4 தமிழ்மீடியா
Download As PDF