வருகை தந்தமைக்கு நன்றி..

வெள்ளி, 19 ஆகஸ்ட், 2011

ரேஷன் அரிசியை நிவேதானமாக பெற்ற நாகேஸ்வரர்.

                     ரேஷன் அரிசியை நிவேதானமாக பெற்ற நாகேஸ்வரர்.

   ஈரோடு மாவட்டம் கொடுமுடியை அடுத்த ஊஞ்சலூரில் அமைந்துள்ளது. நாகேஸ்வரர்கோயில்.

விஜயநகர பேரரசர்கள் காலத்தில் காவிரி ஆற்றின் கரையில் கட்டப்பட்டுள்ள இந்தக்கோயிலில்

 மூலவர் நாகேஸ்வரர், அமிர்வள்ளியுடன், சுப்பிரமணியர் வள்ளி தெய்வானை. வரதராஜபெருமாள் சீதேவி,

 பூதேவியுடனும், ஆஞ்சநேயர், கருடன், ஆகியோருடன் நவக்கிரகங்களும், கன்னிமூல கணபதி, ஸ்ரீ துர்க்கா,

 தட்சணாமூர்த்தி, நாகர் ஆகியோர் அருள் பாலிக்கின்றனர்.

மிகப்பழமையான இந்தக்கோயிலுக்கு  மன்னர்கள் காலத்தில் வழங்கப்பட்ட

 நிலங்கள்  நிறைய இருந்தும் தற்போது அவற்றால் இந்தக்கோயிலுக்கு பயன்கிடைக்காமல் உள்ளது.

கடந்த பத்தாண்டுகளுக்கு முன்னர் இந்தக்கோயிலின் நித்யபடிகளுக்கு  ரேஷனில் வழங்கப்படும் அரிசியை

பயன்படுத்தவேண்டிய நிலை இருந்தது.

 இது குறித்து அறிந்த சில பக்தர்கள் மனங்கலங்கி கோயிலுக்கு நித்ய படிகள்  செய்ய தங்களால்

இயன்றளவுக்கு உதவி புரிந்து வருகின்றனர். ராகு மற்றும் செவ்வாய் கிரகர்களின் தோஷங்களினால்

பாதிக்கப்பட்டவர்கள் இந்தக்கோயிலுக்கு வந்து வணங்கி சென்றால் கிரகங்களின் பார்வையினால் ஏற்படும்

பாதிப்புகள் அகன்று தொழில் அபிவிருத்தி, மற்றும் இல்லத்தில் அமைதி ஆகியவை பெறுவதாக

சொல்லப்படுகிறது

 இந்தக்கோயிலில் இந்து மதத்தை சாராதவர்களும் வந்து ஆராதனைகள் நடத்துவது வழக்கமாக உள்ளது.

இஸ்லாமிய சமுதாயத்தைச்சேர்ந்த பக்தர்களும் இந்தக்கோயிலுக்கு வந்திருந்து கோயிலில் அமைந்துள்ள

ஸ்ரீ துர்க்கைக்கு பாலாபிஸேகம் நடத்தி வழிபட்டு செல்வது வழக்கமாக உள்ளது. இந்தக்கோயிலின் சிறப்புகளை 

அறிந்த வெளிமாவட்ட  பக்தர்கள் சிலரும் கோயிலுக்கு வந்து வேண்டுதல் வைத்து வழிபடுவது வாடிக்கையாக

உள்ளது.

 தற்போது அய்யப்ப பக்தர்கள் அய்யப்பனின் சிலையை கோயிலில்  நிறுவி, வழிபட்டுவருகின்றனர்.

ஆண்டுதோறும்  சித்திரை மற்றும் கார்த்திகை, மார்கழி மாதங்களில் சபரிமலையில் நடைபெறுவது

 போன்றே காவிரியில் அய்யப்பனின் <உற்சவருக்கு ஆராட்டுக்கள் நடக்கின்றன. சபரியில் அய்யப்பனின் ஆராட்டு

நடக்கும் நடைபெறும் போது தெய்வ சங்கல்பங்களாக நடைபெறும் நிகழ்வுகள் இங்கு நடக்கின்றன.

கோயிலில் இருந்து உற்சவர் ஆராட்டுக்கு புறப்பட்டதிலிருந்து ஆராட்டு முடிந்து வழிபாடு பூர்த்தியாகும்

வரையில் உற்சவரை சுற்றியும், கோயிலைச்சுற்றியும் கருடன்கள் வட்டமிடுகின்றன.
  
நாகேஸ்வரர்கோயிலின் எதிரில் ஸ்ரீ ராகவேந்திரசுவாமியின் பிருந்தாவனம் அமைக்கப்பட்டு ஆண்டுதோறும்

வழிபாடு நடந்து வருகிறது. இது தவிர திருவண்ணாமலை சித்தர் என அழைக்கப்படும் ஸ்ரீ சேஷாத்திரி

சுவாமிகளின்  அதிஷ்டானம்  இங்கு அமைந்துள்ளதால் சுவாமிகளின் பக்தர்கள் ஆண்டுதோறும் நாட்டின்

பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்திருந்து சுவாமியின் வழிபாட்டை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

        ஊஞ்சலூரின் முதல் தெய்வமாகவும், முதல் கோயிலாகவும் அமைந்த நாகேஸ்வரர் கோயில் கட்டப்பட்டு

பல நூறு ஆண்டுகள் ஆனதால் கோயில் கட்டிடங்கள் மிக பழமையாகி பல்வேறு இடங்களில் சிதிலமடைந்துகாணப்படுகிறது.

தமிழக அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் <<உள்ள இந்தக்கோயில் புனரமைக்கப்படுவது

அவசியம். இது குறித்து கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்னர் பக்தர்கள் கோரிக்கை வைத்தபோது அப்போது

 அ.தி.மு.க அமைச்சரவையில் அமைச்சராக இருந்த அறநிலையத்துறை அமைச்சர்  கோயி<லுக்கு நேரில் வந்து

பார்வையிட்டுமிக விரைவில் கோயில் புனரமைக்கப்படும் என உறுதிகூறிச்சென்றார்.

ஆண்டுகள் பல கடந்த நிலையில் நாகேஸ்வரர்கோயிலில் புனரமைப்பு பணிகள் அரசின் சார்பில்

துவக்கப்படுவதற்கான எந்த அறிகுறிகளும்   இது வரை தென்படவில்லை.

 மன்னர்கள் காலத்தில் அமைக்கப்பட்ட இந்தக்கோயிலை பாதுகாத்து

கோயிலுக்காக தரப்பட்ட வருமான ஆதாரங்களை சரிபார்த்து பக்தர்களின் மனங்களையும்

கோயில் மூலவரின் மனத்தினையும்  குளிரச்செய்யலாமே?.
Download As PDF

கருத்துகள் இல்லை: