வருகை தந்தமைக்கு நன்றி..

புதன், 24 ஆகஸ்ட், 2011

அன்னாஹசாரேக்கு ஆதரவு தெரிவித்து உண்ணாவிரதம்.






                                                                                                                                

                                                              



                                 அன்னாஹசாரேக்கு ஆதரவு தெரிவித்து உண்ணாவிரதம்.


     ஈரோடு மாவட்டம் சி வகிரி  அருகே தாமரைப்பாளையத்தில் சமூக சேவகர்

அன்னாஹசாரேவின் லோக்கபால்

  மசோதாவைநிறைவேற்றக்கோரும்          உண்ணாவிரதப்போராட்டத்துக்கு

ஆதரவுதெரிவித்து கருத்திபாளையம்
 
வள்ளல் வல்வில் ஓரி கல்வி மற்றும் ஆய்வு அறக்கட்டளை  அமைப்பினர்

உண்ணாவிரதம் இருந்தனர்.

  காலை 9 மணி முதல் மாலை 6 மணிவரை நடந்த இந்த உண்ணாவிரதத்துக்கு

புகளூர் சுதந்திரப்போராட்ட தியாகி  சிங்காரவடிவேல் தலைமை வகித்தார்.

 சிவகிரி  ராஜகோபால் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

 கருத்திபாளையம் கதிரவன் நற்பணி மன்றத்தினர் முன்னிலை வகித்தனர்.

ராஜ்கவுண்டர் வரவேற்றார்.

உண்ணாவிரதத்தை துவக்கி வைத்து கோட்டை செல்வம் சிறப்புரை

ஆற்றினார்.

 உண்ணாவிரதத்தை வல்வில் ஓரி கல்வி மற்றும் ஆய்வு அறக்கட்டளை

செயலாளர் முத்துமணி முடித்து வைத்தார்.

                                    

                                                                     



                                         உண்டியல் திருட்டில் ஈடுபட்ட சிறுவர்கள்.

            
    ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே உள்ள மாரப்பம்பாளையத்தில் உள்ள

பகவதி அம்மன் கோயில் உண்டியலை உடைத்து திருட முயன்றவர்களை

சிவகிரி போலிசார் கைது செய்தனர்.
   
சிவகிரி அருகே உள்ளது மாரப்பம்பாளையம் கிராமம் . இந்த கிராமத்தில் உள்ள

பகவதிஅம்மன்கோயில் உண்டியலை சென்ற மாதம் 29 ம் தேதி  உடைத்து

திருட முயற்சி நடந்தது.

          இந்த முயற்சியில் ஈடுபட்டவர்களை போலிசார் தேடி வந்தனர்.

சம்பவத்தன்று சிவகிரி எஸ்.ஐ. சண்முகம்

சிவகிரி அருகே உள்ள அம்மன்கோயில் கைகாட்டியில் ரோந்து சென்றார்.

அப்போது சந்தேகப்படும்  நின்றிருந்த மூன்று சிறுவர்களிடம் விசாரித்தார்.

விசாரணையில்

 அவர்களில் தர்மன் என்கிற தர்மதுரை(17) மாரப்பம்பாளையம்

கிராமத்தைச்சேர்ந்தவர் என்பதும்,

சத்தியமூர்த்தி(17) கார்த்தி என்கிற கார்திகேயன் (16) சிவகிரி திரு.வி.

தெருவைச்சேர்ந்தவர்  என்பதும் கடந்த மாதம் மாரப்பம்பாளையத்தில்

உண்டிலை உடைக்க முயற்சித்தவர்கள் என்பதும் தெரியவந்தது.

 அவர்களை கைது செய்த எஸ்.ஐ சண்முகம் அவர்களை கோவை சிறார்

சிறையில் அடைத்தார்.


Download As PDF

கருத்துகள் இல்லை: