வருகை தந்தமைக்கு நன்றி..

திங்கள், 22 ஆகஸ்ட், 2011

ஒரு கோடி மதிப்பிலான பருத்தி தேக்கம்.

                                 
                                                         
                                           ஒரு கோடி மதிப்பிலான பருத்தி தேக்கம்.

                                 ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஒழுங்கு முறை

விற்பனைக்கூடத்தில் கொள்முதல் செய்யப்பட்ட பருத்தியை 

 கொண்டு செல்ல வழியில்லாமல் இருப்பில் வைக்கப்பட்டது.

                      அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்துக்கு பருத்தி மற்றும்

நிலக்கடலை, எள் ஆகியவற்றை விவசாயிகள் கொண்டு

              வந்து  ஏலத்தில் விற்பது வழக்கம்.
                   
                      மாவட்டத்தில் அதிகப்படியான பருத்தியை கொள்முதல் செய்வதில்

 தனி இடம் பெற்ற இந்த ஒழுங்குமுறை விற்பனைக்கூடம்

 வாரந்தோறும்  திங்கள் முதல் புதன் முடிய செயல்படுவது வழக்கம்.
 
                      சென்ற வாரம் இந்த விற்பனைக்கூடத்துக்கு அதிகப்படியான

பருத்தியை விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.

             ரூ1 கோடியே 45 லட்சம் மதிப்பிலான பருத்தியை வியாபாரிகள்

கொள்முதல் செய்தனர்.

                       இந்தவாரம் தென்னிந்திய லாரி உரிமையாளர்கள் செய்துவரும்

வேலை நிறுத்தம் காரணமாக கொள்முதல் செய்த  ஒரு கோடி மதிப்பிலான

பருத்தியை வியாபாரிகள் எடுத்து செல்ல வழியின்றி இருப்பில் வைத்தனர்.

                       தற்போது லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக அதிகப்படியான

விவசாயிகள் தங்களது விளைபொருட்களை

ஒழுங்குமுறைவிற்பனைக்கூடத்துக்கு கொண்டுவராமல் உள்ளனர்.

அந்தியூர் பகுதியில் தற்போது பருத்தி விளைச்சல் அதிகமான நிலையில்

  லாரி  உரிமையாளர்கள் செய்துவரும்  வேலை நிறுத்தம் காரணமாக

வியாபாரிகள்  பருத்தியை கொள்முதல் செய்வதில் தயக்கம் காட்டி

வருகின்றனர்.






                               
Download As PDF

கருத்துகள் இல்லை: