வருகை தந்தமைக்கு நன்றி..

ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2011

ஆடுகள் பெற பயனாளிகள் தேர்வு

                                




                                    ஈரோடு மாவட்டத்தில் இலவச ஆடுகள் பெற                                                                 பயனாளிகள் தேர்வு

                        சென்ற பொதுத்தேர்தலின் போது அ.தி.மு.க வின் தேர்தல்

  அறிக்கையில் ஏழைகளுக்கு இலவச ஆடுகள் வழங்கப்படும்  என

அறிவிக்கப்பட்டிருந்தது.
                 
              தேர்தலில் ஆட்சியியை பிடித்தது, தேர்தல் அறிக்கையில் சொல்லி

உறுதிமொழியை நிறைவேற்றும் விதமாக தமிழகம் முழுவதும் ஆடுகளை

பெறத்தகுதியானவர்களை தேர்வு செய்யும் பணியை துவக்குமாறு மாவட்ட

ஆட்சியாளர்களுக்கு தமிழக முதல்வர்  உத்தரவிட்டுள்ளார்.

                 அதற்கான  பணிகள்  நடந்து வருகின்றன. கொடுமுடி அருகே

வெங்கம்பூரில் ஈரோடு மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் சார்பில் வாரவிழா

நடந்தது.

         விழாவில்  ஈரோடு மாவட்ட ஆட்சியர் காமராஜ் கலந்துகொண்டார். 

மொடக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட 15 தொடக்கவேளாண்மை சங்கங்களின்

சார்பில் பயனாளிகள் 289 பேருக்கு ரூ89 லட்சத்து 22 ஆயிரம் மதிப்பிலான

நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் அவர் பேசியபோது

தமிழக அரசின் ஆடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் ஈரோடு மாவட்டத்தில்  3500

பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.

Download As PDF

கருத்துகள் இல்லை: