வருகை தந்தமைக்கு நன்றி..

திங்கள், 22 ஆகஸ்ட், 2011

கருத்தரங்கு...

          
                                                             கருத்தரங்கு

      ஈரோடு மாவட்டம்  கொடுமுடி அருகே வருந்தியாபாளையத்தில்

மஞ்சள் சாகுபடிகருத்தரங்கு நடந்தது. இந்திய தொழில் கூட்டமைப்பு  சார்பில்

நடந்த இந்தகருத்தரங்கிற்கு மண்டல தலைவர்  மருத்துவர் அபுல்ஹசன்

தலைமைவகித்தார்.
    
                      சக்தி மசாலா  நிறுவனத்தின் தலைவர் துரைசாமி,

கொடுமுடி  ஒன்றிய    அ.தி.மு.க செயலாளர் புதூர் கலைமணி

உள்ளிட்டோர்  முன்னிலை வகித்தனர்.

                                            
                                      மஞ்சள் ரகங்கள், மஞ்சளை பதப்படுத்தும் முறை,

 கிடங்குகளில் சேமித்தல், இயற்கை உரத்தின் பங்கு,

       சொட்டுநீர் பாசனத்தை கையாளும் வழி, குறித்து தொழில் நுட்ப உத்திகள்

விளக்கம் தரப்பட்டது.
              
                  தொழிலாளர் பற்றாக்குறையின்போது மஞ்சளை

இயந்திரத்தைக்கொண்டு அறுவடை செய்யும் வழிகள் குறித்து

செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.
 
                 கருத்தரங்கில் முன்னாள் அமைச்சர் பி.சி.ராமசாமி, சக்தி மசாலா

நிறுவனத்தின் இயக்குனர் சாந்திதுரைசாமி,

      வாசனைப்பொருட்கள் வாரியத்தின்  கள அதிகாரி ராமலிங்கம்,

தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் துரைõஜ்,உள்ளிட்டோர் பேசினர்.
                              
                                                                       

                                 அந்தியூர், பொம்முடி,அறச்சலூர், நசியனூர்

பகுதிகளைச்சேர்ந்த விவசாயிகள் கருந்தரங்கில் பங்கு பெற்றனர்.

கருத்தரங்கிற்கான ஒழுங்கினை இந்திய தொழில் கூட்டமைப்பின் ஈரோடு

மண்டல மேலாளர் மனோகரன், அட்மா திட்ட தலைவர் கந்தசாமி ஆகியோர்

செய்திருந்தனர்.                 
Download As PDF

கருத்துகள் இல்லை: