வருகை தந்தமைக்கு நன்றி..

திங்கள், 22 ஆகஸ்ட், 2011

தொடரும் சோகம் ....... தொல்லையில் கோயில் நகரம்

                                                     
                                                                          






                                                           தொடரும் சோகம்
                                             தொல்லையில் கோயில் நகரம்
                                  
            ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் பாட்டாளி மக்கள் கட்சியினர்                   

ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர்.
       
              கொடுமுடி புராதன நகராகவும், தமிழக அரசின் சுற்றுலா நகராகவும்

உள்ளது. ஆன்மீக வழிபாட்டுத்தலங்களில் கொங்கு ஏழு தலம் என

அழைக்கப்படும் கோயிலில் ஒன்றான மகுடேஸ்வரர்கோயில் இங்கு உள்ளது.

நாயன்மார்களின் பாடல் பெற்ற தலமாக விளங்கும் இந்தக்கோயிலுக்கு

தினந்தோறும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான

பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

           ஈரோடு கரூர்   வழித்தடத்தில் உள்ள இந்த ஊரை தினந்தோறும்

நூற்றுக்கணக்கான பேருந்துகளும்,  மணல் லாரிகளும்,பல வகைப்பட்ட

வாகனங்களும் கடந்து செல்கின்றன.போக்குவரத்து நிறைந்துள்ள இந்த

ஊரின்   முக்கிய சாலையில் வேகத்தடைகளும், சாலைத்தடுப்புகளும்

இது வரை அமைக்கப்படவில்லை. இதனால் விபத்துக்கள் தொடர்கின்றன.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பேருந்துநிலையத்தை ஒட்டி அமைந்துள்ள

காவல் நிலையத்தின் முன்பே லாரி மோதியதில் ரோட்டைக்கடந்துசென்ற

இருவர் பலியாகியது குறிப்பிடத்தக்கது.
 
         இருந்தபோதிலும் தொடரும் விபத்தைத்தவிர்க்க இது வரை சம்பந்தப்பட்ட

துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர்.

இது குறித்து பல்வேறு அமைப்பினர் சம்பந்தப்பட்ட துறைகளின் கவனத்துக்கு

கொண்டு சென்றும் கவனிக்கப்படாமல் உள்ளது.

       இதனை அறிந்த கொடுமுடி நகர பாட்டாளி மக்கள் கட்சியினர் வருகிற 30

ம்தேதி (ஆகஸ்ட்) அக்கட்சியின் மாவட்ட செயலாளர் வடிவேல் தலைமையில்

ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர். அதற்கான ஒழுங்கினை

 கொடுமுடி நகர பாட்டாளி மக்கள் கட்சியின்

செயலாளர்  பார்த்தீபன் குழுவினர்  செய்துவருகின்றனர்.
Download As PDF

கருத்துகள் இல்லை: